விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேர்த்து மற்று ஓர் களைகண்*  வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்,* 
    நீர்த் திரைமேல் உலவி*  இரை தேரும் புதா இனங்காள்* 
    கார்த் திரள் மா முகில் போல் கண்ணன்*  விண்ணவர் கோனைக் கண்டு,* 
    வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர்*  வைகல் வந்திருந்தே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீர் திரை மேல் உலவி - நீரலைகளின் மேலே உலாவி
இரை தேரும் - உணவுப்பொருள்களை ஆராய்கின்ற
புதா இனங்காள் - பெருநாரைக்கூட்டங்களே!
வினையாட்டியேன் நான் - பாவியான நான்
பேர்த்து மற்று ஓர்களை கண் ஒன்று இலேன் - (உங்களையொழிய) வேறொரு தஞ்சமுடையனல்லேன்

விளக்க உரை

தீவினையேனாகிய நான் உங்களை ஒழிய வேறே ஒப்பற்ற பற்றுக்கோடு ஒன்றனை உடையேன் அல்லேன்; தண்ணீரின் அலைகளின் மேலே சஞ்சரித்து இரையைத் தேடுகின்ற பெருநாரைக் கூட்டங்களே! கார்காலத்தில் எழுந்த திரண்ட பெரிய மேகம்போன்ற நிறத்தையுடைய கண்ணனாகிய விண்ணவர்கோனைக் கண்டு, அவன் கூறுகின்ற வார்த்தைகளைக் கேட்டு, என் பக்கல் கிருபைசெய்து இங்கே வந்திருந்து எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருங்கோள்

English Translation

O Flock of geese searching for worms in the water! Hapless me, other than him, I have no protector, Go see the monsoon-cloud Krishna, Lord of celestials, Come back to me and repeat his words incessantly.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்