விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் மின்னு நூல் மார்வன்*  என் கரும் பெருமான் என் கண்ணன்,* 
    தன் மன்னு நீள் கழல்மேல்*  தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்,* 
    கல்மின்கள் என்று உம்மையான்*  கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,* 
    செல்மின்கள் தீவினையேன்*  வளர்த்த சிறு பூவைகளே!          

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தீ வினையேன் வளர்த்த - கொடிய பாவியான நான் வளர்க்க வளர்ந்த
சிறு பூவைகளே  - சிறு பூவைப்பறவைகளே!
என் மின்னு நூல் மார்வன் - மின்போலே விளங்குகின்ற யஜ்ஞோபவீ தமணிந்த்திருமார்பை எனக்கு அநுபவிப்பித்தவனும்
என் கரும் பெருமான் - தன் திருமேனி நிறத்தை எனக்கு அநுபவித்த பெருமானும்.
என் கண்ணன் - எனக்கு ஸர்வாத்மநா விதேயனுமான எம்பெருமான்

விளக்க உரை

தீவினையேன் வளர்த்த சிறிய பூவைகளே! என் மின்னு நூல் மார்பன், என் கரும்பெருமான், என்கண்ணன், தன்னுடைய நீண்ட திருவடிகளின்மேலே பொருந்தியிருக்கின்ற குளிர்ந்த திருத்துழாயினை நமக்கு அன்றிக் கொடான்; கற்றுங்கொள்ளுங்கோள் என்று உங்களை யான் கற்பித்து வைத்த வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு செல்லுங்கோள்.

English Translation

O Little mynahs, this wicked self brought you up. My radiant-chested dark Lord Krishna will not deny you the Tulasi on his radiant lotus feet. Go to him and speak the worlds I taught, repeating them all the way.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்