விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொல்லை என்பர்கொலோ*  குணம் மிக்கனள் என்பர்கொலோ,* 
    சில்லை வாய்ப் பெண்டுகள்*  அயல் சேரி உள்ளாரும் எல்லே,*
    செல்வம் மல்கி அவன்கிடந்த*  திருக்கோளூர்க்கே,* 
    மேல் இடை நுடங்க*  இளமான் செல்ல மேவினளே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இள மான் - இளமான் போன்ற என்மகள்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருகோளூர்க்கே - செல்வம் நிரம்ப்ப்பெற்று அப்பெருமான் கண்வளர்ந்தருளப்பெற்ற திருக்கோளூரைக்குறித்தே
மெல் இடை நுடங்க - மெல்லிய (தனது) இடை நோகும்படி
செல்ல மேளினளே - புறம்பட்டுச் செல்ல நெஞ்சு பொருந்திவிட்டாளே!, (இதைப்பற்றி)
சில்லை வாய் பெண்டுகள் - வம்புவாயான நஞ்சேரிப் பெண்களுக்கு

விளக்க உரை

தோழியே! செல்வம் மிகும்படி அவன் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்ய தேசத்திற்கு, என் இளமான் மெல்லிய இடையானது அசையும்படியாகச் செல்லுதற்கு ஒருபட்டடாள்; பலவாறு பேசுகின்ற வாய்களையுடைய பெண்டுகளும் அயல் ஊரிலுள்ள பெண்டுகளும் வரம்பு அழிந்த செயலையுடையள் என்பர்கொலோ? குணத்தாலே மேம்பட்டவள் என்பர்கொலோ?

English Translation

What now? Will the wags in the neighborhood call this an act of shamelessness or of high conduct? Alas, my tender fawn decided to leave to Tirukkolur swinging her hips, where the Lord lives with abundant wealth!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்