விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொற்பு அமை நீள் முடிப்*  பூந்தண் துழாயற்கு,* 
    மல் பொரு தோள் உடை*  மாயப் பிரானுக்கு,* 
    நிற்பன பல் உருவாய்*  நிற்கும் மாயற்கு,*  என் 
    கற்பு உடையாட்டி*  இழந்தது கட்டே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொற்பு அமை நீள் முடி - அழகமர்ந்து உயர்ந்த கிரீடத்திலே
பூ தண் துழாயற்கு - அழகியகுளிர்ந்த திருத்துழாயையுடையவனும்
மல் பொரு தோள் உடை - மல்லர்களோடு போர்செய்த திருத்தோள்களையுடையவனும்
மாயம் பிரானுக்கு - அற்புதச் செயல்களைச் செய்யும் மஹோபகாரகனும்
நிற்பன பல் உரு ஆய் நிற்கும் - ஸ்தாவர ஜங்கமங்களாய் நிற்கின்ற பலவகைப் பதார்த்தங்களுமாயுள்ளவனும்

 

விளக்க உரை

(பொற்பமை நீண்முடி) இப்பாட்ல் “என் கற்புடையாட்டி யிழந்தது கட்டே“ என்கிறாள் திருத்தாய். கட்டு என்பதற்கு ஸ்த்ரீத்வமர்யாதை என்றும் பொருள், “எல்லாம்“ என்றும் பொருள். ஸ்த்ரீ த்வமர்யாதையையிழக்கையாவது – லஜ்ஜையோடும் அடக்கத் தோடும் கூடியிருக்கவேண்டிய தன்மையை இழத்தலாம். இப்பதிகத்தில் ஒவ்வொரு பாசுரத்தில் ஒவ்வொன்றை யிழந்தாளாகச் சொல்லிவந்தான். பலசொல்லியென்? இழவாதது ஒன்றுண்டோ? எல்லாமுமிழந்தாள் என்கிறாள். பொற்பு – அழகு, அது அமைந்த திருவபிஷேகத்தின்மேலே திருத்துழாய் மாலை காத்திருக்குமழலே யீடுபட்டு என்மகள் நைகின்றாள். மற்பொரு தோளுடை மாயப்பிரானுக்கு – கண்ணபிரான் பலராமனுடன் வில்விழவுக்கென்று கம்ஸன் மாளிகைக்கு எழுந்தருளும் போது இடைவழியில் கூனியிடம் சாந்து இரந்து பெற்றுத் திருமேனியில் பூசிக்கொண்டான், உடனே கம்ஸனது அரண்மனை வாயிலில் மல்லர்களோடே போர்புரிய நேர்ந்த்து. மல்லபுத்தமாவது ஆயுதசகாயம் சிறிதுமின்றிக்கே உடம்போடு உடம்பு பொருது செய்யும் சண்டை. அப்படிப்பட்ட சண்டை நிகழ்ந்தவளவிலும் திருமேனியிற்பூசின சாந்து சிறிதும் குறியழியாமேயிருந்த மாயத்திலே யீடுபட்டு கைகின்றாளென்மகள் என்கிறாள். * ஏவிற்றுச் செய்வான் என்றெதிர்ந்து வந்த மல்லரைச் சாவத் தகர்த்த சாந்தணிதோள் சதுரன் * என்றபெரியாழ்வார் திருமொழிப் பாசுரம் இங்கு நினைக்கத்தகும்.

English Translation

My intelligent daughter has lost her all, -to the bautiful fall-crown-Tulasi-blossom-Lord whose wondrous arms matched the wrestlers, who stands in all the things that are.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்