விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கற்பகக் கா அன*  நல் பல தோளற்கு,* 
    பொன் சுடர்க் குன்று அன்ன*  பூந்தண் முடியற்கு,* 
    நல் பல தாமரை*  நாள் மலர்க் கையற்கு,*  என் 
    வில் புருவக்கொடி*  தோற்றது மெய்யே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கற்பகம் கா அனநல் பல தோளற்கு - கற்பகச்சோலைபோன்ற நல்ல பல திருத்தோள்களையுடையவனும்
சுடர் பொன் குன்று அன்ன பூ தண் முடியற்கு - சுடர்மிக்க பொற்குன்றம் போன்ற மிகவழகிய திருவபிஷேகத்தை யுடையவனும்
நல் பல தாமரை நான் மலர் கையற்கு - அப்போதலர்ந்த தாமரைப் பூப்போன்று விலக்ஷணமான பல திருக்கைகளையுடையவனுமான எம்பெருமான் திறத்திலீடுபட்டதனால்
என் வில் புருவம் கொடி - வில்போன்ற புருவத்தை யுடையளான என் பெண்கொடி
தோற்றது - இழந்தது

விளக்க உரை

கற்பகச்சோலையைப் போன்ற சிறந்த பல தோள்களையுடையவனுக்கு, பிரகாசம் பொருந்திய பொன்மலையைப் போன்ற அழகிய குளிர்ந்த திருமுடியையுடையவனுக்கு, அன்று பூத்த அழகிய தாமரை மலர்கள்போன்ற திருக்கைகளையுடையவனுக்கு, வில்லினைப்போன்ற புருவங்களையுடைய பூங்கொம்புபோன்ற என் பெண்ணானவள் தனது சரீரத்தினை இழந்தாள்.

English Translation

My tender daughter with bow-like eyebrows has lost her body, -to the Lord of Kalpa-tree-like arms, who wears a beautiful crown of radiant gold; his hands are like freshly blossomed lotuses.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்