விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பண்பு உடை வேதம்*  பயந்த பரனுக்கு,* 
    மண் புரை வையம் இடந்த*  வராகற்கு,* 
    தெண் புனல் பள்ளி*  எம் தேவ பிரானுக்கு,*  என் 
    கண்புனை கோதை*  இழந்தது கற்பே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு - சீர்மைமிக்க வேதங்களை (ப்பிரமனுக்கு) உபகரித்தருளின பரம புருஷனும்,
மண்புரை இடந்தவராகற்கு - மண்மிக்க பூமியை யிடந்தெடுத்த வராஹமூர்த்தியும்,
தெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு - தெளிந்த நீரையுடைய ஏகார்ணவத்திலே பள்ளிக்கொண்ட தேவபிரானுமான எம்பெருமான் விஷயத்தில் (ஈடுபட்டு)
என் கண்புளை கோதை இழந்தது - கண்ணைக்கவர்கின்ற கூந்தலையுடையளான என் மகள் இழந்தது.
கற்பு - அறிவுடைமை.

விளக்க உரை

பகவானுடைய தன்மைகளை உள்ளவாறே சொல்லும் பண்பினையுடைய வேதங்களைப் பிரமனுக்கு உபதேசித்த மேலானவனுக்கு, அணுக்கள் செறிந்த உலகத்தை மேலே கொண்டுவந்த ஸ்ரீ வராகப்பெருமானுக்கு, தெளிந்த தண்ணீரையுடைய பிரளயவெள்ளத்திலே பள்ளிகொண்ட எம் தேவபிரானுக்கு, என்னுடைய, கண்டார் கண்களைப் பிணிக்க வல்ல மயிர்முடியையுடைய பெண்ணானவள் கல்வியை இழந்தாள்.

English Translation

My well-coiffured daughter has lost her mind, -to the Lord who gave the good Vedas, to the one who came as a boar and lifted the Earth, to the Lord who sleeps on clear waters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்