விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிறம் கரியானுக்கு*  நீடு உலகு உண்ட,* 
    திறம் கிளர் வாய்ச்*  சிறுக் கள்வன் அவற்கு,* 
    கறங்கிய சக்கரக்*  கையவனுக்கு,*  என் 
    பிறங்கு இரும் கூந்தல்*  இழந்தது பீடே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நிறம் கரியானுக்கு - கருநிற முடையவரும்
நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய் - (பிரளய காலத்தில்) ஸகல லோகங்களையும் அமுது செய்தபடி தோற்றுகிற திருப்ப வளத்தையுடையராய்க்கொண்டு
சிறு கள்வர் அவற்கு - சிறியவடிவிலே பெரியவுலகங்களை மறைத்துவைத்தவரும்
கறங்கிய சக்கரம் கையவனுக்கு - சுழலும் திருவாழியைக் கையிலே உடையவருமான பெருமான் விளயத்தி லீடுபட்டதினால்

விளக்க உரை

கரிய நிறத்தையுடையவனுக்கு, பெரிய உலகத்தை உண்ட கூறுபாடு விளங்குகின்ற திருவாயினையுடைய சிறிய வடிவிலே பெரிய உலகங்களை எல்லாம் அடக்கிய கள்வனுக்கு, சுழலுகின்ற சக்கரம் பொருந்திய கையையுடையவனுக்கு, என்னுடைய, விளங்குகிற கரிய கூந்தலையுடைய பெண்ணானவள் பெருமையை இழந்தாள்.

English Translation

My well-coiffured daughter has lost her grace, -to the dark-hued Lord, the trickster who swallowed the worlds with his small mouth, to the one who bears a spinning discus in hand.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்