விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வல்லாளன்தோளும்*  வாளரக்கன்முடியும்*  தங்கை- 
  பொல்லாதமூக்கும்*  போக்குவித்தான்பொருந்தும்மலை*
  எல்லாஇடத்திலும்*  எங்கும்பரந்து பல்லாண்டுஒலி- 
  செல்லாநிற்கும் சீர்த்*  தென்திருமாலிருஞ்சோலையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அரக்கன் - ராவணனுடைய
தோறும் முடியும் - தோள்களும், தலைகளும்
தங்கை - (அவனது) தங்கையாகிய சூர்ப்பணகையினது
பொல்லாத மூக்கும் - கொடிய மூக்கும்
போக்குவித்தான் - அறுப்புண்டு போம்படி பண்ணின எம்பெருமான்

விளக்க உரை

வல்லாளன் என்று- பாணாஸுரனைச் சொல்லிற்றாய், அவனது தோள்களையும், ராவணனது முடிகளையும் போக்குவித்தானென்று உரைத்தலுமொன்று, திருமலையில் ஓரிடந்தப்பாமல் எங்கும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்ற மங்களாசாஸந கோஷமேயா யிருக்குமென்பது, பின்னடிகளின் கருத்து, எல்லாவிடத்திலும்- அநந்யப்ரயோஜநரோடு ப்ரயோஜநாந்தர பரரோடு வாசியற எல்லாரிடங்களிலும் மென்றபடி; புனத்தினைக்கிள்ளிப் புதுஅவிக்காட்டுகிற குறவரும் “உன் பொன்னடிவாழ்க” என்று மங்களாசாஸநம் பண்ணுவார்கள் என்று மேல், “துக்கச்சுழலை” என்ற திருமொழியில் அருளிச் செய்வது காண்க

English Translation

The Lord who cut asunder the heads and arms of the strong well-armed Rakshasa Ravana and the nose of his evil sister Surpanakha resides in Malirumsolai eternally, where in every nook and corner all over the hill, the sounds of Pallandu. Glory be, rend the air.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்