விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அலம்பாவெருட்டாக்*  கொன்றுதிரியும் அரக்கரை* 
  குலம்பாழ்படுத்துக்*  குலவிளக்காய் நின்றகோன்மலை*
  சிலம்பார்க்கவந்து*  தெய்வமகளிர்களாடும்சீர்* 
  சிலம்பாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே.  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆடும் சீர் - நீராடும்படியான பெருமையையுடைய
சிலம்பு ஆறு - நூபுரகங்கையானது
பாயும் - (இடைவிடாமல்) பெருகப் பெற்றுள்ள
தென்திருமாலிருஞ் சோலை - அழகிய திருமாலிருஞ் சோலையானது,
அலம்பா - பிராணிகளை அலையச் செய்தும்

விளக்க உரை

அலம்பா, வெருட்டா - ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்; அலம்பி, வெருட்டி என்றபடி: அலம்புதல் - ‘இவர்களின் கீழ் நமக்குக் குடியிருக்க முடியாது’ என்று நிலைதளும்பச் செய்தல்; பிறவினையில் வந்த தன்வினை. (சிலம்பு ஆர்க்க இத்யாதி.) தேவஸ்த்ரீகள் முன்பு நூபுரகங்கையில் நீராட வரும்போது ராவணாதி ராக்ஷஸர்களுக்க அஞ்சித் தாங்கள் இருப்பிடத்தைவிட்டு புறப்படுவது அவ்வரக்கர்கட்குத் தெரியாதைக்காகத் தம் காற்சிலம்புகளை கழற்றிவிட்டு வருவார் சிலரும், அவை ஒலிசெய்யாதபடடி பஞ்சையிட்டடைத்துக்கொண்டு வருவார் சிலருமாயிருப்பர்கள்; எம்பெருமான் அவதரித்து, அரக்கரைக் குலம் பாழ்படுத்த பின்புச் சிலம்பு ஒலிக்க வருவர்களென்க. சிலம்பாறு- நூபுரகங்கையென்று வடமொழிப் பெயர்பெறும். திருமால் உலகமளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற் சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன் கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவிவிளக்க, அக்காற் சிலம்பினின்று தோன்றியதனாற் சிலம்பாறு என்று பெயராயிற்று. நூபுரகங்கை என்ற வடமொழப் பெயரும் இதுபற்றியதே. நூபுரம்-சிலம்பு, ஒருவகைக்காலணி. இனி இதற்கு வேறுவகையாகவும் பொருள் கூறுவர், ஆழ்வான், ஸுந்தரபாஹுஸ்தவத்தில், “***“ என்றருளிச் செய்தபடி * மரங்களுமிரங்கும் வகை மணிவண்ணவோவென்று கூவின ஆழ்வார் பாசுரங்களைக்கேட்ட குன்றுகள் உருகிப் பெருகா நின்றமையால், அதற்குச் சிலம்பாறென்று பெயராயிற்று, சிலம்பு – குன்றுக்கும் பெயர், “சிலம்பொழி ஞெகிழிகுன்றாம்“ என்பது சூளா மணி நிகண்டு. இப்பொருளை ரஸோக்தியின் பாற் படுத்துக.

English Translation

The Rakshasas roamed freely killing all: The world fled in fear. The Lord, who destroyed them by the root, stands as the tutelary deity in Malirumsolai hill, Where the Nupura Ganga flows, and celestial dames with tinkling anklets come to take a bath.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்