விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கேயத் தீம்குழல் ஊதிற்றும் நிரைமேய்த்ததும்*  கெண்டை ஒண்கண்* 
    வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்*  மணந்ததும் மற்றும்பல,* 
    மாயக் கோலப் பிரான்தன்*  செய்கை நினைந்து மனம்குழைந்து,* 
    நேயத்தோடு கழிந்த போது*  எனக்கு எவ் உலகம் நிகரே?      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கேயம் தீம் குழல் ஊதிற்றும் - சிறந்த கானமாக மதுரமான ய்ங்குழலை ஊதினதென்ன.
நிரை மேய்த்ததும் - பசுக்கூட்டங்க மேய்த்ததென்ன
கெண்டை ஒண்கண் வாசம் பூ குழல் பின்னை தோள்கள் மணந்ததும் - கென்னட மின்போன்று அழகிய கண்களையும் நறுமணம்மிக்க பூக்களணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னையின் தோள்களோடே அணையப்பெற்றதென்ன இவையும்
மற்றும் பல - மற்றும் பலவுமான
மாயம் கோலம் பிரான்தன் செய்கை - திவ்யமங்கள விக்ரஹசாலியான கண்ணபிரானுடைய சேஷ்டிதங்களை

விளக்க உரை

(கேயத்தீங்குழல்) கண்ணபிரானுடைய வேணுகானத்தின் சிறப்பு பெரியாழ்வார் திருமொழியில் * நாவலம் பெரியதீவினில்வாழும் * என்கிற திருமொழியிலே பத்துப் பாசுரங்களினால் பரக்கப் பேசப்பட்டது. அவற்றின் பொருளையெல்லாம் சுருக்கி பட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவ உத்தர சதகத்தில் ஒரு ச்லோகத்தினால் அருளிச்செய்தார், •••• இத்யாதி. அதில் •••• த்வம் தேஷு அந்யதமாம்ப்பூவித பவத்வேணுக்வணோந்மாதநே * என்கிற ஈற்றடி பரமரஸம். வேணுகானத்தைக் கேட்டு விகாரப்பட்டவர்களில் கண்ணபிரான் தானும் ஒருவனானான் என்கிறது. •••• என்கிற வடசொல் கேய மெனத் திரிந்தது. தீம் – இனிமை. நிரைமேய்த்தும் – பரமபதத்திலே நித்யர்களுக்கும் முக்தர்களுக்கும் ஓலக்கம் கொடுத்துக் கொண்டு பராத்பரனாக விளங்கும் பெருமான் அவ்விருப்பிலே விருப்பற்றவனாய், பூலோகத்திலே வந்து பிறக்கவேணுமென்றும் அதிலும் * அறியாதார்க்கு ஆனாயனாகிப்போய் * என்கிறபடியே அறியாதர்க்குள்ளே அறிவுகேட்டுக்கு எல்லைநிலமான இடைச்சாதியிலே வந்து தோன்ற வேணுமென்றும் திருவுள்ளம்பற்றி வந்து சேர்ந்து சாதியின் மெய்ப்பாட்டுக்காகத் தானே மாடுகளையுங் கன்றுகளையும் மேய்த்தவிது என்ன நீர்மை! என்று உருகுகிறபடி. திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவாயெங்களாயர் தேவை * என்கிறார் இவ்வாழ்வார் தாமே மேலே. இதற்கு இரண்டுபடியாக நிர்வாஹம், (1) திவத்திலும் என்பதை ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு பரமபதத்திலிருப்பைக் காட்டிலும் பசுக்கூட்டங்களை மேய்ப்பது தன்னையே உகக்கின்றாய், (2) ஏழாம் வேற்றுமையாகக் கொண்டு, பரமபதத்திலிருக்கச் செய்தேயும் பசுநிரை மேய்ப்பதையே உகக்கின்றாய், (அதாவது) அவதார ஸமாப்தியாகித் தன்னடிச் சோதிக் எழுந்தருளியான பின்பும் அங்கும் பசுக்களை மேய்க்கிற வாஸநையே அனுவர்த்தித்து “டீயோ! டீயோ!“ என்றே வாய்வெருவிக் கொண்டிருக்கிறபடி.

English Translation

My Krishna went grazing his cows, playing sweet melodies on his flute; he locked himself in the embrace of the well-coiffured Nappinnai. My heart melts when I recall these and many wonders of his. My time is spent lovingly, now who in the world can match me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்