விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிழல் வெய்யில் சிறுமை பெருமை*  குறுமை நெடுமையும் ஆய்* 
    சுழல்வன நிற்பன*  மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்* 
    மழலை வாய் வண்டு வாழ்*  திருவிண்ணகர் மன்னு பிரான்* 
    கழல்கள் அன்றி*  மற்றோர் களைகண் இலம் காண்மின்களே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நிழல் வெய்யில் - நிழலாயும் வெய்யிலாயும்
சிறுமை பெருமை - அணுத்வமாயும் விபுத்வமாயும்
குறுமை நெடுமையும் ஆய் - ஹ்ரஸ்வத்வமாயும் தீர்க்கத்வமாயும்
சுழல்வன நிற்பன மற்றும் ஆய - ஜங்கமங்களாயும் ஸ்தாவரங்களாயும் மற்றுமுள்ள பதார்த்தங்களாயும்
அவை அல்லனும் ஆய் - அவற்றினுடைய ஸ்வபாவத்தையுடையனல் லாதவனாயும் இருந்து கொண்டு

விளக்க உரை

(நிழல் வெய்யில்) “பாட்டுக்கு க்ரியையும் பத்துக்குக் கருத்தும்போலே நூற்றுக்கு உபதேசப்பத்து“ என்கிற ஆசார்யஹ்ருதய ஸ்ரீஸூக்தியின்படி ஒவ்வொரு நூறுபாசுரங்களினுள்ளும் ஒவ்வொரு பதிகம் உபதேசபரமா யிருக்குமாதலால் இந்த ஆறாம்பத்துக்கு இத்திருவாய்மொழியே உபதேசபரமாகக் கொள்ளத்தக்கது. இது உபதேச ரூபமென்பது மற்ற பாசுரங்களில் வ்யக்தமாகக் காணாமல் இப்பாசுரத்தில் வ்யக்தமாகக் காண்கிறது. “மற்றோர்களைகணிலம் காண்மின்களே“ என்றது காண்க. பன்னீராயிரப்படியிலும் இப்பாட்டின் உரையவதாரிகையில் “உபதேசித்து முடிக்கிறார்“ என்றருளிச் செய்திருப்பதுங் குறிக்கொள்க. தாபசாந்தியைத் தருமதான நிழலும் தாபகரமான வெய்யிலும், சிறுமைக்கு எல்லையான அணுத்வமும் பெருமைக்கு எல்லையான மஹதத்வமும், மத்யம் பரிமாணங்களிலுண்டான ஹ்ரஸ்வத்வ தீர்க்கத்வங்களும், ஜங்கமஸ்தாவரங்களான மற்றுமுள்ள பதார்த்தங்களுமாய், இப்படி ஸர்வ சரீரியாகா நிற்கச்செய்தே அவற்றினுடைய ஸ்வபாவத்தை உடையனல்லாதவனுமாய்க் கொண்டு, வண்டுகள் தென்னாதெனாவென்று முரலப்பெற்ற திருவிண்ணகரிலே உறைகின்ற பெருமானது திருவடிகளை யொழிய வேறொரு சாணமுடையோ மல்லோம் நாம், இதை நீங்களும் நிரூபித்துக் கொள்ளுங்கோள் என்றாராயிற்று.

English Translation

As shade and sunlight, as small and big, as long and short, as walking and standing, as other things and not any of them, -the Lord resides in Tiru-vinnagar with sweetly humming bees. His feet alone protect us all, O See, the truth in this!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்