விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உகவையால் நெஞ்சம் உள் உருகி*  உன் தாமரைத் தடம் கண் விழிகளின்* 
    அக வலைப் படுப்பான்*  அழித்தாய் உன் திருவடியால்* 
    தகவு செய்திலை எங்கள் சிற்றிலும்*  யாம் அடு சிறு சோறும் கண்டு*  நின்- 
    முக ஒளி திகழ*  முறுவல் செய்து நின்றிலையே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உகவையால் - அந்தரங்கப்ரீதியாலே
நெஞ்சம் உள் உருகி -நெஞ்சு உள்ளேயுருகி
உன் தாமரை தடம் கண்விழிகளின் வலை அகப்படுப்பான் - உன்னுடைய தடந்தாமரைக் கண்ணோக்கமாகிற வலினுள்ளே நாங்கள் அகப்படும்படி பண்ணுவதற்காக
உன் திருஅடி யால்அழித்தாய் - உன் திருவடியாலுதைத்து நொறுக்கித் தள்ளினாய்
எங்கள் சிற்றிலும் - நாங்கள் இழைக்கின்ற சிற்றிலையும்

விளக்க உரை

(உகவையால் நெஞ்சம்) கீழ்ப்பாட்டில் * உணக்கி நீவளைத்தால் * என்றபடியே அவள் வளைப்பிட்டுக்கிடக்கச் செய்தேயும் இவர்கள் அந்யபரதை பாவிக்கவேண்டி அவனை யொரு பொருளாகமதியாதே தோழிமாரோடுகூடச் சிற்றிலிழைத்துச் சிறு சோறு அட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். இவன்றான் இவர்களுடைய கடாக்ஷமல்லது தனக்கு வேறொரு தாரகமில்லையென்று துணிந்திருப்பானொருவனாகையாலே எப்படியாவது இவர்கள் தன்னைக் கடாக்ஷிக்கும்படி செய்துகொள்ளவேண்டுமென்று நினைத்து, அவர்கள் இழைக்கும் சிற்றிலையும் சமைக்கும் சிறு சோற்றையும் தன்னுடைய திருவடிகளாலே உதைத்தொழித்தான், அவனது திருவுள்ளக்கருத்தையறிந்த இவர்கள் அவனுடைய திருமுகத்தைப்பார்த்துப் பேசுகின்றார்கள், உன்பக்கலுள்ள ப்ரேம விசேஷத்தாலே நாங்கள் நெஞ்சு உருகி உன் தாமரைத் தடங்கண் விழிகளாகிற வலையிலே அகப்படுகைக்காக எங்கள் சிற்றிலையும் யாம் அடுகின்ற சிறு சோற்றையும் உன் திருவடியால் அழித்தருளினாய், நாங்கள் விளையாடுகிறபடியைக் கண்ணாரக்கண்டு கொண்டு மகிழ்ந்து நிற்கையன்றோ உனக்கு அழகு, அந்தோ! அது செய்யமாட்டிற்றிலையே, கல்படைத்த ப்ரயோஜனம் பெற்றாயே யல்லது கண்படைத்த ப்ரயோஜனம் பெற்றாயல்லையே, கண்ணுடையாரில் நீ தலைவனாயிருந்துவைத்து இங்ஙனே கண்ணற்ற காரியம் செய்யவடுக்குமோ? என்கிறார்கள்.

English Translation

To melt our heart with love and trap us in your lotus-snare, you trod on the sand-castles we made and took the food we had laid out, you did not merely stand and watch, with you radiant smile. Alas! We are not fortunate.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்