விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு*  அன்று நீ கிடந்தாய்*  உன் மாயங்கள்- 
    மேலை வானவரும் அறியார்*  இனி எம் பரமே?* 
    வேலின் நேர் தடம் கண்ணினார்*  விளையாடு சூழலைச் சூழவே நின்று* 
    காலி மேய்க்க வல்லாய்!*  எம்மை நீ கழறேலே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏழ் உலகும் உண்டு - ஸமஸ்த லோகங்களையும் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து
ஆலின் நீள் இலை - ஆலமரத்தின் இளந்தளிரிலே
அன்று நீ கிடந்தாய் - முன்னொருகாலத்தில் கிடந்தவனல்லையோ நீ
உன் மாயங்கள் - உனது மாயச்செயல்களை
மேலே வானவரும் அறியார் - மேற்பட்டவர்களான நித்யஸூரிகளும் அறியார்கள்,

விளக்க உரை

(ஆலினீளிலே) கீழ்ப்பாட்டில் “நின்செய்யவாயிருங் கனியுங் கண்களும் விபரீதமிந்நாள்“ என்றதைக்கேட்ட கண்ணபிரான் ‘விபரீதமானது என்னிடம் யாதென்றும் இருக்கில்லாது, நான் செய்வது எதுவும் ருஜுவாக இருக்குமே யல்லது விபரீத மென்னும்படியாக என்னிடம் ஒன்றுமிருக்க ப்ரஸக்தியில்லை, விபரீதமோ மாயமோ எல்லாம் உங்களிடத்தே யல்லது என்னிடம் ஒன்றுமில்லை, என்றான், அதற்குக் கூறுகின்றாள் – “ஆலினீளிலை யேழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய், உன் மாயங்கள் மேலேவானவருமறியார் இனியெம்பரமே?“ என்று, உலகங்களையெல்லாம் திருவயிற்றினுள் ஏகதேசத்தில்வைத்து ஓர் ஆலந்தளிரிலே துயில்கொள்பவனல்லையே நீ, * பாலன் தனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்த மெய்யென்பர் – ஆலன்று, வேலைநீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ, சூலைசூழ்குன்றெடுத்தாய் சொல்லு * (முதல் திருவந்தாதி) என்று மாஞனிகளும் அதிசயிக்கும்படியான இந்த மாயத்தை மேலையோரான வானவர்களும் அறியகில்லாதாராயிருக்க, நாங்களோ அறிகிற்போம்? உன் மாயத்தை நீயே அறியவேண்டுமத்தனை என்றபடி.

English Translation

Then you swallowed the worlds and slept; your wonders even gods do not, -so how can we? –understand! You know how to graze your cows where Vel-eyed damsels play sand-castles, Then do not brother use, I Pray!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்