விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்*  அகல் ஞாலம் கொண்ட* 
    வன் கள்வன் அடிமேல்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 
    பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும்*  திருவண்வண்டூர்க்கு* 
    இன்கொள் பாடல் வல்லார்*  மதனர் மின்னிடை யவர்க்கே* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய் - ஒளியையுடைத்தாய், திருமேனிக்குச் சேர்ந்த்தான் யஜ்ஞோபவீதமணிந்த வாமனமூர்த்தியாகி
அகல் ஞாலம் கொண்ட - விசாலமான பூமி முழுவதையும் அளந்து கொண்ட
வன் கள்வன் - மஹாவஞ்சகனான எம்பெருமானுடைய
அடிமேல் - திருவடிகள் விஷயமாக
குருகூர் சடகோபன் சொன்ன - நம்மாழ்வார் அருளிச் செய்த

விளக்க உரை

(மின்கொள் சேர்) இத்திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுக்கும் அவனடியார்கட்கும். விரும்பத்தக்கவராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. “மதனர்மின்னிடையவர்க்கு“ என்றதில் இங்ஙனே பல்ச்ருதி காண்கிறதோ வென்னில், அது உபமான மாத்திரத்தைச் சொன்னபடி. காமினிகளுக்குக் காமுகர் எப்படி விரும்பத்தக்கவர்களோ அப்படி என்றவாறு. திருநாட்டிலுள்ள திவ்யாப்ஸரஸ்ஸுக்களை மின்னிடையவர் என்றதாகக் கொள்ளவுமாம். “நிதியும் நற்சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதிமுகமடைந்தையர் ஏந்தினர்வந்தே“ என்கிற உபசாரங்கள் செய்யப்பெறுவார் என்கை. “இன் கொள்பாடவல்லார்“ என்ற பாடம் மறுக்கத்தக்கது.

English Translation

This decad of the thousand songs by kurugur Satakopan on the Lord who came and took the Earth will win the hearts of damsels.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்