விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உணர்த்தல் ஊடல் உணர்ந்து*  உடன் மேயும் மட அன்னங்காள்* 
    திணர்த்த வண்டல்கள்மேல்*  சங்கு சேரும் திருவண்வண்டூர்* 
    புணர்த்த பூந் தண் துழாய்முடி*  நம் பெருமானைக் கண்டு* 
    புணர்த்த கையினராய்*  அடியேனுக்கும் போற்றுமினே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊடல் உணர்த்தல் உணர்ந்து - (பிரிவு சிறிது உண்டா) ஊடலும் உணர்த்தலுமாகிற சிரமங்கள் நேருமென்ற்றிந்து
உடன் மேயும் - கணப்பொழுதும் விட்டுப்பிரியாமல் கூடவே திரிகின்ற
மடம் அன்னங்காள் - துவண்ட அன்னங்களே!
திணர்த்த வண்டல்கள் மேல் - கொழுத்த வண்டல் மணல்களின் மேலே
சங்கு சேரும் - சங்குகள் சேருமிடமான

விளக்க உரை

(உணர்த்தனுடலுணர்ந்து) இப்பாட்டில் ப்ரகாரத்தான் மூன்று வகைப்பட்டாயிற்றிருப்பது, அவையாவன ஊடலுணர்தல் புணர்தலிவை மூன்றும், காமத்தாற்பெற்றபயன் என்று மூன்றையும் கூடினால் அஹேதுகமாக விளைவதொன்று. அதுதான் ‘என்னையொழிக்குளித்தாய், என்னையொழியப் பூவைப்பார்த்தாய், உன் உடம்பு பூநாறிற்று‘ என்னையொழிக்குளித்தாய், என்னையொழியப் பூவைப்பார்த்தாய், குளித்தேன் என்கையும் உனக்கு ஆம் என்று பார்த்தேன் என்கையும் “உன்வரவுக்கு ஒப்பித்தேன்“ என்றாற்போலே சொல்லுமிவை. இவையிரண்டின் அனந்தரத்தே வருவது கல்வி“ என்றருளிச்செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்ரீஸூக்தியில் உதாஹரிக்கப்பட்டுள்ள தமிழ்ச்செய்யுள் திருவள்ளுவர் குறள். அது “ஊடலுணர்தல் புணர்தலிவை மகிழ்தல் கூடியார்பெற்றபயன்“ என்னும் பாடமாகவே குறளிற் காண்கிறது. (புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் ஒன்பதாவது குறள் இது.) உணர்தல் என்பதற்கு – தலைமகன் தன்னுடைய தவறில்லாமையைச் சொல்லி நாயகியினுடைய ஊடலை நீக்குதல்“ என்று பொருளுரைக்கப்பட்டிருக்கின்றது. உணர்த்ல், உணர்தல் இவையிரண்டும் இங்குப் பரியாயமேயென்க.

English Translation

O Swan pair, you know how to make peace after a quarrel My Lord wearing a Tulasi garland on his crown resides inTiruvan-vandu where conches fill the dunes, Go see him with folded hands and pray for me also.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்