விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒண் சுடரோடு இருளுமாய்*  நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து*  என்- 
    கண் கொளாவகை*  நீ கரந்து என்னைச் செய்கின்றன* 
    எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்*  என் கரிய மாணிக்கமே!*  என் கண்கட்குத்- 
    திண் கொள்ள ஒரு நாள்*  அருளாய் உன் திரு உருவே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உண்மையோடு இன்மை ஆய் வந்து - மெய்யனாய்த் தோற்றுகை பொய்யனாய்த் தோற்றுகை ஆகிற இரண்டுபடியோடுங்கூடி
ஒண் சுடரோடு இருளும் ஆய் நின்ற ஆறும் - ஒண்சுடராயும் இருளாயம் நிற்கிறபடிகளும்
என் கண்கொளாவகை - என் கண் உன்னையநுபலியாதபடி
கரந்து - உள்ளேமறைந்து நின்று
நீ என்னை செய்கின்றன - நீ என்னைப் படுத்துகிறபாடுகளும் ஆகிறவிவற்றை

விளக்க உரை

(ஒண்சுடரோடு.) ஒண்சுடராய் நிற்றல் இருளாய்நிற்றல் இன்னர்க்கென்று சொல்லாமையாலே ஸ்வவிஷயத்திலேயும் கொள்ளலாம்; ஆச்ரிதாநாச்ரித விஷயத்திலேயே கொள்ளலாம். ஸ்வவிஷயத்திலே கொண்டான், உன்னநுபவத்திலே உண்மையோடே ஒண்சுடராய் நிற்கும்; பாஹ்யாநுபவத்தில் வந்தால் இன்மையோடு இருளாய் நிற்கும் என்க. ஆச்சிதா நாக்ரித விஷயத்திலே கொண்டால், ஆச்ரிதர்களுக்குதங தன்படிகளில் ஒன்றுங் குறையாதபடி காட்டிக்கொடுத்து ஒண்சுடராயும் உண்மையாயும் நிற்பன்; அநாச்சிதர்களுக்குத் தன்படிகளிலொன்றும் தெரியாதபடிபண்ணி அந்தாலே அவர்களுக்கு இல்லையென்னும்படி இருளப்பண்ணி நிற்பன் என்க. பிரானே! என்னளவில் நீ ஒண்சுடராகவோ இருளாகவோ ஏதேனுமொருபடி திண்ணமாக இருந்து விட்டால் குறையில்லை. கண்ணுக்கு விஷயமாகாதபடி யிருக்கையாலே இருளாய், மறக்கவொண்ணாதபடி நெஞ்சிலே விசதமாக நிற்கையாலே சுடராய் இபுபடிப இருபடியுமாக நின்று என்னை நீ செய்கிறவற்றை எண்ண நினைக்கிற நெஞ்சோடே நான் சிதிலனாகாநின்றேன்; உன் வடிவழகை எனக்கு புஜிக்கத்தந்தருளின நீ நான் திடமாகக் காணலாம்படி என்னுடைய கண்களுக்கு உன்னுடைய திருவுருவை ஒருநாளாகிலும் அருளவேணுமென்றாயிற்று.

English Translation

I faint at the thought of the things you do to me, -standing as radiance amid darkness and truth amid untruth, My Gem-hued Lord! Grace your presence just one day, that I may drink deeply with my eyes, and fill myself with your form.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்