விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தொல் அருள் நல் வினையால்*  சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்* 
    தொல் அருள் மண்ணும் விண்ணும்*  தொழ நின்ற திருநகரம்* 
    நல் அருள் ஆயிரவர்*  நலன் ஏந்தும் திருவல்லவாழ்* 
    நல் அருள் நம் பெருமான்*  நாராயணன் நாமங்களே?*   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தோழிமீர்களா - தோழிகளே
மண்ணும் விண்ணும் - உபயவிபூதியிலுள்ளாரும்
தொல் அருள் - தனது இயற்கைத் திருவருளை
தொழநின்றதிருநகரம்- கொண்டாடும்படி நிற்குமிடமாய்
நல் அருள் ஆயிரவர்  நலன் ஏந்தும்- மஹா தயாளுக்களான ஆயிரக்கணக்கான சிஷ்டர்கள் நன்மையோடு வர்த்திக்கு மிடமான

விளக்க உரை

(தொல்லருள்.) பரவ்யூஹ் விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரங்களென்ற ஐந்தினுள் அர்ச்சாவதாரமே அருள்மிக்க இடமென்பது ப்ரஸித்தம். பரவ்வூஹங்கள் தேசவிபரகர்ஷத்தாலே உபயோகமற்றவை; அந்தர்யாமித்வம் அதிகாரியருமையாலே பயனற்றது. அர்ச்சாவதாரம் அப்படியன்றிக்கே “பின்னானார் வணங்குமிடமாய் அருளே வடிவெடுத்ததாகவும் “தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழநின்ற திருநகரம்” என்றார். உபயவிபூதியிலுள்ளாரும் தொல்லருளை அநுபவிக்குமிடம் என்றபடி. இவ்விசேஷணம் இங்குத் திருவல்லவாழ்க்கு இடப்பட்டிருந்தாலும் அர்ச்சாவதார ஸரமாநியத்திலே அந்வயிக்கக்கூடிய விசேஷணம் இது. அன்றியே, மண்ணிலீது போலுநகரில்லையென வானவர்கள் தாம் மலர்கள் தூய் நண்ணியுறைகின்ற நகர் சந்திபுரவிண்ணகரம் என்னுமாபோலே இவ்விடத்திற்கென்று விசேஷித்துக்கொண்டாடும் அருளைச் சொன்னதாகவும். நல்லகுளாயிரவர் நலனேந்தும் = எம்பெருமானைக் காட்டிலும் அருள்மிக்கவரான ஆயிர மந்தணாளர்கள் மங்களாசாஸநம் பண்ணிக்கொண்டு வாழுமிடமென்கை. இப்படிப்பட்ட திருவல்லவாழிலே நல்ல அருளையுடையனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவனுடைய திருநாமங்களையாவது, தோழிகளே! அவனுடைய கருணையாகிற ஸுக்ருதவிசேஷத்தாலே நாம் சொல்லி வாழக்கூடுமோ வென்றாளாயிற்று. நல னேத்தும் என்கிற பாடமுமுண்டென்பர்.

English Translation

O Sakhis! Our Lord is praised high by many thousands of devotees. The Earth and Heaven know the abiding grace of Narayana residing in the good city of Tiruvallavai. When will it be our fortune to chant his names with love?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்