விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கழல் வளை பூரிப்ப யாம் கண்டு*  கைதொழக் கூடுங்கொலோ* 
    குழல் என்ன யாழும் என்ன*  குளிர் சோலையுள் தேன் அருந்தி*
    மழலை வரி வண்டுகள் இசை பாடும்*  திருவல்லவாழ்* 
    சுழலின் மலி சக்கரப் பெருமானது*  தொல் அருளே?*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குளிர் சோலையுள் - குளிர்ந்த சோலைகளிலே
தேன் அருந்தி - மதுவைப் பருகி
மழலை வரி வண்டுகள்- மழலைத் தொனியையுடைய அழகிய வண்டுகள்
குழல் என்ன யாழ் என்ன- வேஸ கானமோ வீணா கானமோ என்னும்படியாக
இசை பாலும் - இசைபாடப்பெற்ற

விளக்க உரை

(சுழல்வளை) குளிர்ந்த சோலைகளிலே தேனைப்பருகி, ‘இது வேணுகாலமோ? அல்லது வீனா கானமோ? என்று சந்தேகிக்குமாறு வண்டுகள் இசைபாடுமிடமான திருநல்வாழிலே கையும் திருவாழியுமாகக் காட்சி தாரா நின்றுள்ள எம்பெருமானை அவன்றன்னுடைய திருவருளாலே யாம் கண்டு கை தொழ நேருமோ? என்கிறாள். பிரிவாற்றாமையால் கைவலை சுழலுமென்றும் கலவியின்பத்தால் மேனி தடித்து வளை பூரிக்குமென்றும் அநுபவமாதலால் “சுழல்வளை பூரிப்ப” எனப்பட்டது. பாட்டு முடிவிலுள்ள சுருள் என்பதை எழுவாயாகவைத்து, அருளானது யாம் கைதொழும்படியாக, கூடுங்கொலோ என்னவுமாம்.

English Translation

The Lord of abiding grace wielding a spinning discus resides in Tiruvallaval amid cool groves, where young bumble bees drink nectar and hum like the flute and the Yal-harp. When will I worship his form and wear my slipped bangles again?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்