விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாள்கள் ஓர் நாலைந்து*  திங்கள் அளவிலே*
  தாளை நிமிர்த்துச்*  சகடத்தைச் சாடிப்போய்*
  வாள் கொள் வளைஎயிற்று*  ஆருயிர் வவ்வினான்*
  தோள்கள் இருந்தவா காணீரே*
   சுரிகுழலீர் வந்து காணீரே 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நாள்கள் - (கண்ணன் பிறந்தபின்பு சென்ற) நாட்கள்;
ஓர்நாலு ஐந்து திங்கள் அளவிலே - ஒரு நாலைந்து மாதத்தளவிலே;
தாளை நிமிர்ந்து - காலைத் தூக்கி;
சகடத்தை - சகடாஸுரனை;
சாடிப்போய் - உதைத்துவிட்டு;

விளக்க உரை

உரை:1

பிறந்த பின்னர் ஒரு நாலு ஐந்து மாதங்கள் சென்ற பின்னர் தன்னுடைய திருவடியினை நிமிர்த்தி சகடாசுரனை உதைத்து அழித்து விட்டு ஒளி பொருந்திய வளைந்த கோரப்பற்களைக் கொண்ட பூதனையின் அரிய உயிரை அவள் முலைப்பாலுடன் எடுத்துக் கொண்டவனின் அழகான தோள்கள் இருந்தவாறைக் காணுங்கள். சுருண்ட தலைமுடியை உடைய பெண்களே வந்து பாருங்கள்.

உரை:2

கண்ணபிரான் நந்தகோபர் திருமாளிகையில் ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிற் பள்ளிகொண்டிருக்க, யசோதையும் யமுனைக்குப் போயிருக்க, அந்த வண்டியில் கம்ஸனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்து மேல்விழுந்து கொல்ல முயன்றதை அறிந்து, பாலுக்கு அழுகிற பாவனையாலே தனது சிறிய திருவடிகளை மேலே தூக்கி யுதைத்தருள, அவ்வுதை பட்டமாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழே விழுந்து அசுரனுட்பட அழிந்ததென்கிற கதை முன்னடிகளில் அடங்கியுள்ளது. இப்படி சகடத்தை முறித்தவனும் பூதனையை முடித்தவனுமான பெருமானுடைய தோளழகை வந்து காணுங்களென்றாளாயிற்று. ‘‘நாலைந்து திங்களளவிலே’’ என்பதற்கு - நாலு அல்லது ஐந்து மாதங்களுக்குள்ளே என்றும், (நாலு மைந்துங்கூடின) ஒன்பது மாதங்களுக்குள்ளே என்றும் (நாலால் பெருக்கப்பட்ட ஐந்தாகிய) இருபது மாதங்களுக்குள்ளே என்றும் பொருளாகும். இவ்வாழ்வார் மங்களாசாஸ நபரராதலால், ஸ்வலப்யஸிலே அரிய பெரிய காரியஞ்செய்தானென்று சொன்னால் கண்ணெச்சில்படுமோ என்றஞ்சி அங்ஙனம் த்ருஷ்டிதோஷம் வராமைக்காக, மாதம்நாலென்றும் ஐந்தென்றும் ஒன்பதென்றும் இருபதென்றுந் தெரியாதபடி மயங்கவருளிச் செய்தனரென்று ரஸோக்தியாக அருளிச்செய்வர் பூருவர்.

English Translation

O Ladies with curly locks, come here and see the arms of this child. About four or five months old, he smote the devilish cart and sucked the life out of the brightly smiling ogres Putana.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்