விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காப்பார் ஆர் இவ் இடத்து?*  கங்கு இருளின் நுண் துளி ஆய்* 
    சேண் பாலது ஊழி ஆய்*  செல்கின்ற கங்குல்வாய்த்* 
    தூப் பால வெண்சங்கு*  சக்கரத்தன் தோன்றானால்* 
    தீப் பால வல்வினையேன்*  தெய்வங்காள்! என் செய்கேனோ?*   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இவ்விடத்து - இந்நிலையில்
காப்பார் ஆர் - ரக்ஷிப்பாரார்?
சுங்கு இருளின் - நன்றாக சொரிந்த இருளையுடையதாயும்
நுண் துளி ஆய் - நுண்ணிதான பணித்துளியையுடையதாயும்
சேண் பாலது - மிக நீண்டிருப்பதான

விளக்க உரை

(காப்பராவர்) இப்பேரிருளிலே என்செய்வேனென்று. உறங்காத தெய்வங்களைக் குறித்து முறையிடுகின்றான். காப்பாளர் இவ்விடத்து = ரக்ஷகளென்ற பேர் பெற்றிருக்கும் பெருமாள் தானும் ரக்ஷியாதே உபேக்ஷித்திருக்குமிக்காலத்திலே வேறு ரக்ஷகதைத் தேடப்போமோ? கங்கிருளின் நுண் துளியாய் = தடித்த விருளும் நுட்பமான பனித்துளியுமாய் என்றபடி. கங்கு என்று எல்லை நிலத்திற்குப் பேராசையாலே எல்லை நிலமாகச் செறிந்த இருள் என்றதாயிற்று. சேட்பாலது ஊழியாய் = நீண்டு பெருகிச் செல்லும் தன்மையதான கல்பகாலமாகி என்றபடி. இப்படிச் செல்லா நின்ற காலத்தினை சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களுமாய் எங்குங் கண்டறியாத ஸேவையுடனே எங்கள் பிரான் தோன்றவேணுமே; அந்தோ! தோன்றியருளவில்லையே! இங்ஙனே அவன் உபேக்ஷிக்கும்படி என்ன பாபம் பண்ணினேன்! தெய்வங்களே! என் செய்வேன்? சொல்லுங்கோளென்கிறாள். தேவதைகள் உறங்காதவர்கள், தானும் உறங்காதவள்; இந்த ஸாம்யத்தைவிட்டு அவர்களோடு உறவு கொண்டாடிக் கேட்கிறாள் போலும். துயருற்ற காலத்திலே அம்மே! என்பாரைப்போலே தெய்வங்களென்றதும் ஒரு வார்த்தைப்பாடு.

English Translation

The sky is densely packed with powdered pitch. The long night stretches like an aeon. The Lord of spotless conch and discus does not appear. Yea gods! What shall I do? My acts are wicked as fire!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்