விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சித்திரகூடத்து இருப்பச்*  சிறுகாக்கை முலை தீண்ட* 
  அத்திரமே கொண்டு எறிய*  அனைத்து உலகும் திரிந்து ஓடி*
  வித்தகனே! இராமாவோ!*  நின் அபயம் என்று அழைப்ப*
  அத்திரமே அதன்கண்ணை*  அறுத்ததும் ஓர் அடையாளம்*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இருப்ப - நீங்களிருவரும் ரஸாநுபவம் பண்ணிக் கொண்டிருக்கையில்;
சிறு கங்கை - சிறிய காக்கையின் வடிவு கொண்டு வந்த ஜயந்தன்;
முலை தீண்ட - (உமது) திருமுலைத் தடத்தைத் தீண்ட;
அத்திரதே கொண்டு - ப்ரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்து;
எறிய - பிரயோகிக்க;

விளக்க உரை

வநவாஸ காலத்தில் சித்திரகூட மலைச்சாரலிலே பெருமாளும் பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிற ஸமயத்தில், இந்திரன் மகனான ஜயந்தன் பிராட்டியினழகைக் கண்டு மயங்கி அவளைத் தான் ஸ்பார்சிக்க வேண்டுமென்னுந் தீயகருத்தினனாய்த் தேவவேஷத்தை மறைத்துக் காகவேஷத்தைப் பூண்டு கொண்டு வந்து, பிரட்டியின் மடியிலே பெருமாள் பள்ளிகொண்டருளுகையில் தாயென்றறியாதே பிராட்டியின் திருமார்பினிற் குத்த, அவ்வளவிலே பெருமாள் உணர்ந்தருளி மிகக் கோபங்கொண்டு ஒரு தர்ப்பைப்புல்லை யெடுத்து அதில் ப்ரஹ்மாஸ்த்ரத்தை ப்ரயோகித்து அதனை அந்தக் காகத்தின்மேல் மந்தகதியாகச்செலுத்த, அக்காகம் அந்த அஸ்த்ரத்துகு“குத் தப்பிவழிதேடிப் பலவிடங்களிலும் ஓடிச்சென்று சேர்ந்த விடத்தும் ஒருவரும் ஏற்றுக் கொள்ளாமையாலே மீண்டும் பெருமாளையே சரணமடைய, அப்பெருமான் அருள்கொண்டு, அக்காகத்துக்கு உயிரைக்கொடுத்து அந்த அஸ்திரம் வீண்படாமல் காகத்தின் ஒரு கண்ணை அறுத்தவளவோடு விடும்படி செய்தருளினான் என்ற வரலாறு இங்கு அடையாளமாகக் கூறப்பட்டது. ஸ்ரீ ராமாயணத்தில் ஸுந்தரகாண்டத்தில் இந்த வருத்தாந்தம் திருவடிக்குப் பிராட்டியருளிச் செய்வதாக்க் காணப்படகின்றது. இங்கு பிராட்டிக்குத் திருவடி கூறுவதாகச் சொல்லுகிற விது, கல்பாந்தரத்திலாதல், புராணாந்தரத்திலாதல் உண்டென்று கொள்ளக்கடவது. இனி, மற்றும் பலவகைகளாலும் ஸமாதானங் கூறலாம். அத்திரம் ??????????? என்ற வடசொல் திரிபு. “அத்திரமே“ முதல் ஏகாரம் – இசைநிறை, இரண்டாவது சிறப்புப் பொருளது நின் அபயம்யான் அந்ந்யகதி என்றபடி.

English Translation

In Chitrakupta when a small raven pecked your breast, Rama threw a blade of grass that made him run all over the three worlds. Then finally the raven surrendered at Rama’s feet crying for mercy. The weapon only plucked out one eye. This here is another proof.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்