விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பெருமா உரலிற்*  பிணிப்புண்டு இருந்து*  அங்கு 
  இரு மா மருதம்*  இறுத்த இப் பிள்ளை*
  குருமா மணிப்பூண்*  குலாவித் திகழும்* 
  திருமார்வு இருந்தவா காணீரே*
  சேயிழையீர் வந்து காணீரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பெரு மா உரலில் - மிகப்பெரிய உரலோடு;
பிணிப்புண்டு - கட்டுண்டிருந்து இருந்து;
அங்கு - அந்த நிலைமையிலே;
இரு மா மருதம் - இரண்டு பெரிய மருத மரங்களை;
இறுத்த - முறித்தருளின;

விளக்க உரை

மிகப்பெரிய உரலில் பிணிக்கப்பட்டிருந்த வேளையில் அவ்வுரலையும் இழுத்துக்கொண்டு அங்கு வளர்ந்திருந்த இரண்டு பெரிய மருத மரங்களின் இடையே சென்று அவ்விரு மரங்களையும் முறித்த இந்தப் பிள்ளையினுடைய மிகச்சிறந்த மாணிக்க நகைகள் விளங்கும் திருமார்வம் இருந்த படியைப் பாருங்கள். செம்மையுடைய நகைகளை அணிந்த பெண்களே காணுங்கள்.

English Translation

Bright-jeweled Ladies, come here and see the radiant chest of this child adorned with a dazzling pendant. Tethered to a huge mortar, he crawled between the twin Arjuna trees and broke them.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்