விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குறைவு இல் தடங்கடல் கோள் அரவு ஏறி*  தன் கோலச் செந்தாமரைக்கண்,* 
    உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த*  ஒளி மணி வண்ணன் கண்ணன்,*
    கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி*  அசுரரைக் காய்ந்த அம்மான்,* 
    நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்*  யான் ஒரு முட்டு இலனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குறைவு இல்  தட கடல் - குறையற்ற (பரிபூர்ணமான) விசாலமான திருப்பாற் கடலிலே
கோள் அரவு ஏறி - மிடுக்கனான திருவனந்தாழ்வான் மீது ஏறி
தன் - தன்னுடைய
கோலம் - அழகிய
செம் தாமரை கண் - செந்தாமரை போன்ற திருக்கண்கள்
 

விளக்க உரை

இந்நிலத்தில் வந்து திருவவதாரம் பண்ணுதற்கு அடியாகத் திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளிப் பிறகு வஸுதேவர் திருமகனாய் வந்து பிறந்தருளி ஆச்ரித விரோதிகளைத் தொலைந்தருளின கண்ணபிரானுடைய கீர்த்தியைப் பலபடியும் அநுபவிக்கப்பெற்ற நான் மேன்மேலும் இங்ஙனம் அநுபவிப்பதில் யாதொருதடையுமுடையேனல்லேனென்கிறார். குறைவில் தடங்கடல் = கீழே தமக்குக்கூறிய குறைவில்லாமையை இங்குத் தடங்கடலுக்குங் கூறுகின்றார், தடங்கலும் நானுமே குறைவில்லாதவர்கள் என்று கருத்துப் போலுமாழ்வார்க்கு. “மாலுங் கருங்கடலே! என்னோற்றாய், வையகமுண்டாலினிலைத் துயின்றவாழியான், கோலக் கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றுந் திருமேனி நீ தீண்டப்பெற்று” என்ற பொய்கையார் பாசுரத்தின்படியே கடலின் குறைவில்லாமை காண்க. “தன்தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி - கிடந்தான்” என்கிறபடியே எம்பெருமான் தனது திவ்யாவயவங்களை ஸங்கோசமறப் பரப்பிக்கொண்டு கண்வளர்ந்தருளுகைக்குப் பர்பாப்தமான இடமுடையகடல் என்பார் ‘தடங்கடல்’ என்கிறார். அப்படிப்பட்ட கடலிலே, மிடுக்குடைய திருவனந்தாழ்வான்மீது திருக்கண்வளர்பவன்போல உலகங்களை ரக்ஷித்தருளும் படியைச் சிந்தைசெய்து கொண்டிருக்கின்றானாயிற்று.

English Translation

The Lord of radiant gem hue, my Krishna, performs yoga on a serpent bed in the deep ocean with half-closed lotus eyes, Riding the red-beaked Garuda, he came and destroyed many toes. Singing and dancing his praise, I am treed from want.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்