விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  என் நாதன் தேவிக்கு*  அன்று இன்பப்பூ ஈயாதாள்* 
  தன் நாதன் காணவே*  தண்பூ மரத்தினை*
  வன் நாதப் புள்ளால்*  வலியப் பறித்திட்ட* 
  என் நாதன் வன்மையைப் பாடிப் பற* 
  எம்பிரான் வன்மையைப் பாடிப் பற.* (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் நாதன் - எனக்கு ஸ்வாமியான கண்ணபிரானுடைய;
தேவிக்கு - தேவியான ஸத்யபாமைப் பிராட்டிக்கு;
இன்பம் பூ - மனோஹரமான கற்பகப்பூவை;
அன்று - (அவன் விரும்பின) அக்காலத்தில்;
ஈயாதான் தன் - கொடாத இந்திராணியினுடைய;

விளக்க உரை

ஸ்ரீகிருஷ்ணவதார குணசேஷ்டிதங்களைப் பாடலுற்ற ஆய்மகளின் பாசுரம், இது. இங்குக் கூறிய வரலாறு:- கண்ணபிரான், நகராஸுரனை ஸம்ஹரித்து, அவனால் முன்னே கவர்ந்துகொண்டு போகப்பட்ட இந்திரன் தாயான அதிதியினுடைய குண்டலங்களை அவளுக்குக் கொடுப்பதற்காகப் பெரிய திருவடியின்மேற் சத்தியபாமையை உட்கார்வித்துத் தாமும் உட்கார்ந்து கொண்டு தேவலோகத்திற்குச் செல்ல, அங்கு இந்திராணி ஸத்யபாமைக்குப் பல உபசாரங்களைச் செய்தும் தேவர்க்கே உரிய பாரிஜாத புஷ்பம் மானிடப்பெண்ணாகிய இவளுக்குத் தகாதென்று ஸமர்ப்பிக்கவில்லையாதலின், அவள் அதனைக் கண்டு விருப்புற்றவளாய் ஸ்வாமியைப் பார்த்து, பிராணநாயகனே! இந்தப் பாரிஜாத தருவைத் துவாரகைக்குக் கொண்டுபோகவேண்டும் என்றதைக் கண்ணன் திருச்செவிசாத்தி அந்த வ்ருக்ஷத்தைப் பெரிய திருவடியின் திருத்தோளின்மேல் வைத்தருளினபோது, இந்திராணி தூண்டுதலினால் வந்து தன்னோடு யுத்தஞ் செய்து நின்ற இந்திரனைச் சலக தேவனசன்யங்களடனும் தனது சங்கநாதத்தினாலே பங்கப்படுத்தினனென்பதாம் ‘அருட்கொண்டலன்ன அரங்கர் சங்கோரையி லண்டமெல்லாம், வெருட்கொண்டிடர்ப்பட மோகித்து வீழ்ந்தனர் வேகமுடன், தருக்கொண்டு போகப்பொறாதே தொடருஞ் சதுர்முகனும், செருக்கொண்ட முப்பத்து முக்கோடி தேவருஞ்சேனையுமே” என்ற பிள்ளைப் பெருமாளையங்கார் பாசுரமுமறிக. (வன்னாதபுள்ளால்) கருடன் வேதமயனென்று வேதங்கூறும் “????????????????????????????” என்றார் ஆளவந்தாரும்; “சிரஞ்சேதன்ன் விழிதேகஞ் சிறையின் சினைபதங்கந், தரந்தோள்களூரு வடிவம் பெயரெமர் சாம்முமாம், பரந்தே தமதடியார்க்குள்ள பாவங்கள் பாற்றியருள், சுருந்தேயளிக்கு மாங்கர்தமூர்திச் சுவணனுக்கே” (திருவரங்கத்துமாலை, 38) என்றார் ஐய்ங்காரும். வல் என்னும் அடைமொழியை நாதம் என்பதற்கு ஆக்கும்போது, நாத்த்துக்கு வன்மையாவது. பாஹ்யருத்ருஷ்டிகளால் சலிப்பிக்க ஒண்ணாமையென்க; புள்ளுக்கு விசேஷணமாகில், வன்மை நினைத்தபடி செய்து முடிக்கவல்ல சக்தி. ஈற்றடியில் வன்மைக்கும் பொருள் இதுவே. இவ்வாழ்வார் ராமகிருஷ்ண உபயாவதார குணசேஷ்டிதங்களை ஏக்காலத்தில் அநுபவிக்க விரும்பினபொழுதிலும் முதன்முதலாக க்ருஷ்ணாவதாரவ்ருத்தாந்த்த்தைப் பேசினபடியால் இவர்க்கு மிக்க அபிநிவேசம் கிருஷ்ணாவதாரத்திலே யாமென்பது போதருமென்ப.

English Translation

When Indra’s wife refused to part with the celestial flower the fierce-sounding bird Garuda uprooted the tree and planted in Satyabhama’s house, while Indra meekly watched. Sing my Lord’s glory and swing. Sing my master’s glory and swing

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்