விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  யாவையும் எவரும் தானாய்*  அவரவர் சமயம் தோறும்,* 
  தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்*  சொலப்படான் உணர்வின் மூர்த்தி,*
  ஆவி சேர் உயிரின் உள்ளால்*  ஆதும் ஓர் பற்று இலாத,* 
  பாவனை அதனைக் கூடில்*  அவனையும் கூடலாமே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உணர்வின் மூர்த்தி - ஞானஸ்வரூபமாக இருக்கின்ற எம்பெருமான்
பாவையும் - எல்லா அசேதனப்பொருள்களும்
யவரும் - எல்லாச் சேதனர்களும்
தான் ஆய் - தாயேயாகியும் (சேதநாசேதநங்களில் அந்தராத்மாவாகத்தான் பிரவேசித்திருந்தும்)
அவர் அவர் சமயம் தோறும் - அந்தந்தச் சேதனர்கட்கு உரியனவான (சுகம் துக்கம் முதலிய நிலைமைகளில்)

விளக்க உரை

  யாவையும் யவரும் தானாய் - உயிரில்பொருள்கள் உயிர்கள் ஆகிய எல்லாவற்றுள்ளும் தான் அந்தரியாமியாய் நின்று, அவரவர் சமயந்தோறும் தோய்விலன் - அவ்வப்பொருள்களின் விகாரங்களைத் தான் அடையான். சமயம் - அவஸ்தை, விகாரம் பரசுரத்தில் அவரவர் சமயந்தோறும் என்றிருந்தாலும், அவையவை சமயந்தோறும் என்பதையும் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும். உயிர்களின் விகாரங்களாவன, அவ்வவ்வுயிர் கொண்டுள்ள உடம்பிற்கேற்ப உண்டாகும் இன்பதுன்பங்கள். உயிரில் பொருள்கட்குரிய விகாரங்களாவன, வளர்தல் பருத்தல் முதலியவை. இருவகைப் பொருள்கட்குள்ளும் அந்தரியாமியாய் நிற்கும் இறைவன் அவற்றின் விகாரங்களை அடைவதில்லை என்பது கருத்து. இதனை ஓர் உதாரணத்தால் விளக்குகின்றார் மேல்; ஆவி சேர் உயிரினுள்ளால் ஆது மோர் பற்றிலாத பாவனை அதனைக் கூடில் அவனையுங் கூடலாமே - உடம்பினுள் இருக்கின்ற உயிர் அவ்வுடம்பின் விகாரங்களை அடைவதில்லை என்பதை நன்கு தெளிவோமாயின், அவ்வுடம்பு, உயிர் இரண்டனுள்ளும் இருக்கின்ற இறைவன் அவ்விரண்டன் விகாரங்களையும் அடைவதில்லை என்பதையும் நன்கு தெளியலாம் என்பது கருத்து. ஆவி - உடம்பு; ஆகுபெயராகக் கொள்க. ‘யாதும்’ என்பது ‘ஆதும்’ எனத் திரிந்தது. அவனை - இறைவனை. எம்பெருமான் எல்லாப்பொருள்களுள்ளும் அந்தரியாமியாய் நிற்கின்றான் என்னும் கருத்தைப் பல இடங்களில் ஆழ்வார் வெளியிட்டுள்ளனர்.

English Translation

He is beyond the senses, a body of consciousness. He is the form in all the things and life in all the beings present at all times and all places yet apart from them all, if you can attain detachment, you too can reach him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்