விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மகிழ் கொள் தெய்வம்*  உலோகம் அலோகம்,* 
  மகிழ் கொள் சோதி*  மலர்ந்த அம்மானே,*
  மகிழ் கொள் சிந்தை*  சொல் செய்கை கொண்டு,*  என்றும் 
  மகிழ்வுற்று*  உன்னை வணங்க வாராயே.      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மகிழ் கொள் - மகிழ்ச்சியைக் கொண்ட
தெய்வம் - தேவ வர்க்கமும்
உலோகம் - ஞான வொளியையுடைய மானிட வர்க்கமும்
அலோகம்- ஞானவொளியில்லாத விலங்கு தாவரம் என்பவையும்
மகிழ்கொள் சோதி - உலகுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற சோதிப்பொருள்களான சந்திர ஸூரியர்களும்

விளக்க உரை

மகிழ்ச்சியை யுடையவர்களான தேவர்கள். காணப்படுகின்ற அசித்து, கண்களால் காண முடியாத ஆத்துமாக்கள், மகிழ்ச்சியைக் கொள்ளச் செய்கிற ஒளி உருவமான சந்திர சூரியர்கள் ஆகிய இப்பொருள்களாக விரிந்திருக்கின்ற தலைவனே! மகிழ்ச்சியையுடைய மனமும் சொல்லும் தொழிலும் ஆகிய இவற்றைக்கொண்டு என்றும் மகிழ்ச்சியுடன் கூடி நான் வணங்கும்படி நீ எழுந்தருள வேண்டும்.

English Translation

O Lord, blossom of radiant joy pervading celestials, mortals and things! Come that we may worship you joyously with sweet thoughts, words and deeds.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்