விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எனக்கே ஆட்செய்*  எக்காலத்தும் என்று,*  என் 
  மனக்கே வந்து*  இடைவீடு இன்றி மன்னி,*
  தனக்கே ஆக*  எனைக் கொள்ளும் ஈதே,* 
  எனக்கே கண்ணனை*  யான் கொள் சிறப்பே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எக்காலத்தும் - எக்காலத்திலும்
எனக்கே ஆள் செய் என்று - ‘எனக்கே அடிமை செய்யக் கடவாய்’ என்று சொல்லி
என் மனக்கே வந்து - எனது மனத்திலேயே எழுந்தருளி
இடை வீடு இன்றி - இடைவிடாமல்
மன்னி - நிலைபெற்றிருந்து

விளக்க உரை

‘எல்லாக் காலத்திலும் எனக்கே அடிமை செய்வாய்,’ என்று என் மனத்தின்கண் வந்து பிரிதலின்றி நிலை பெற்று நின்று, தனக்கே நான் உரியவனாம்படி என்னை ஏற்றுக்கொள்ளுமிதுவே, தனக்குத் தகுதியாகக் கிருஷ்ணனிடத்தில் யான் விரும்பிக் கொள்ளுகின்ற பயனாகும்.

English Translation

My Lord resides in my heart forever saying, "Serve me alone of all times". He has taken me as his own. This si indeed a blessing for us.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்