விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சீர்மை கொள் வீடு*  சுவர்க்கம் நரகு ஈறா,* 
  ஈர்மை கொள் தேவர்*  நடுவா மற்று எப் பொருட்கும்,*
  வேர் முதல் ஆய் வித்து ஆய்*  பரந்து தனி நின்ற,* 
  கார் முகில் போல் வண்ணன்*  என் கண்ணனை நான் கண்டேனே.        

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சீர்மை கொள் - மேன்மை பொருந்திய
வீடு - மோக்ஷமும்
சுவர்க்கம் - ஸ்வர்க்கமும்
நரகு - நரகமும்
ஈரு ஆ - மேலெல்லையாக

விளக்க உரை

ஸம்ஸாரிகள் எம்பெருமானை மறந்து எப்படியாவது தொலையட்டும் அவர்களில் ஒருத்தனான நானும் அவர்களைப்போலே பாழ்பட்டொழியாமே ஒருவாறு உஜ்ஜீவிக்கப்பெற்றேனே! என்று தமக்கு நேர்ந்த லாபத்தைக் குறித்துக் களித்துப் பேசுகிறார். ஸ்வர்க்கம் மோக்ஷம் முதலிய ஸகல புருஸார்த்தங்களுக்கும், நரகம் முதலிய அபுருஷார்த்தங்களுக்கும், இவற்றுக்கு போக்தாககளான தேவாதி ஸ்தாவராந்தமர்ன ஸகலாத்மவர்க்கத்துக்கும், தாரகனாய்க் காரணபூதனாய், நியாமகனாய், தன்னுடைய வ்யாவருத்தி தோற்றும்படி ஸ்ரீவைகுண்டத்திலே கார்காலத்துக் கார்முகில் போலேயிருக்கிற அழகிய திருமேனியை யுடையவனாயிருந்துவைத்து, ஸ்ரீகிருஷ்ணனாய் வந்தவதாரித்து எனக்குக் கையாளானவனை, முந்துறமுன்னம் நான் கண்டு அனுபவிக்கப்பெற்றேனே! என்று தம்பேற்றுக்குத் தாம் உவந்து பேசினாராயிற்று. ஈர்மைகொள் தேவர்- ஈர்மை யென்பது ஈரம் மனவிரக்கம், தம்மை வணங்கி வழிபடுகின்ற சேதநர்கட்குப் பலனளிப்பதற்கீடான கருணை வாய்ந்தவர்கள் என்றபடி. இனி ஈர்மை என்றது இரண்டு என்ற படியாய், கர்மபாவநையும் ப்ரஹ்மபாவனையுமாகிற இரண்டு பாவனையையுமுடையவர்களென்னவுமாம். இது வாதி கேஸாரியின் நிர்வாஹம். வேர், முதல், வித்து என்ற சொற்களும் காரண வாசகங்களே; ஸஹகாரி காரணம் நிமித்தகாரணம் உபாதாநகாரணம் என்கிற மூவகைக் காரணங்களும் தானேயாய் என்றவாறு.

English Translation

The root and cause of all is he, filling Heaven. Hell and Earth. He prevades the high seat, the gods, the demons and all mortals.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்