விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கிடந்து இருந்து நின்று அளந்து*  கேழல் ஆய் கீழ்ப் புக்கு 
  இடந்திடும்,*  தன்னுள் கரக்கும் உமிழும்,*
  தடம் பெருந் தோள் ஆரத் தழுவும்*  பார் என்னும் 
  மடந்தையை,*  மால் செய்கின்ற,*  மால் ஆர் காண்பாரே?    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கிடந்து - (கடற்கரையில் வழி வேண்டிக்) கிடந்து
இருந்து - (சித்திரக்கூட கிரியில் இருந்தும்
நின்று - (ராவணனை முடித்தபிறகு இலங்கை வாசலில் வீர ஸ்ரீயோடே) நின்றும்.
அளந்து - த்ரிவிக்ரமாவதாரஞ் செய்தும்.
கேழல் ஆய் - வராஹ ரூபியாகி

விளக்க உரை

இவ்விபூதி எம்பெருமானுக்கே அஸாதாரண மென்னுமிடத்திற்குத் தனித்தனியே உபபத்திகள் பலபல வுளவென்கிறார். கிடந்திருந்துநின்று-இதற்கு இரண்டுபடியாக நிர்வாஹம் செய்தருள்வார்கள்; திருப்பாற்கடலிலே தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடக்குங் கிடையையும், பரமபதத்திலே வீற்றிருக்குமிருப்பையும், திருமலையிலே நிலையார நிற்கும் நிலையையும் அநுஸந்திருக்கிறாரென்னுதல். கடலரசனை வழி வேண்டிக் கடறகரையிலே சாய்ந்தபடியையும், மஹா;ஷிகளின் ஆச்ரமத்திலே சென்று இருந்த படியையும், வாலியைக்கொன்னு (அல்லது இராவணனைக்கொன்று) நின்ற நிலையையும் அநுஸத்திக்கிறாரென்னுதல். முந்தின நிர்வாஹத்திற்குப் பரத்வ ப்ரகாச நத்தில் நோக்கு; பிந்தின நிர்வாஹத்திற்கு ஸௌலப்ய ப்ரகாசனத்தில் நோக்கு. “அன்றியே, புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று என்கிறபடியே அர்ச்சாவதாரஸ்தலத்திலே கிடந்து மிருந்தும் நின்றும்” என்ற ஒன்பதினாயிரமுங் காண்க. அளந்து கேழலாய் என்று தொடங்கி இப்பூமிப்பிராட்டி யிடத்து எம்பெருமான் மால்கொண்டு செய்த செயல்கள் பலவுங் கூறப்படுகின்றன. இடந்திடும், கரக்கும், உமிழும், தழுவும் என்பவற்றை வினைமுற்றாகவுங் கொள்ளப் பொருந்தும்

English Translation

Lying, sitting, standing Lord, -he came as a boar, Diving deep he lifted Dame Earth safely on his shoulders. He swallows the Universe then brings it out again. who can fathom all thee deeds?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்