விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாதவன் என்றதே கொண்டு*  என்னை இனி இப்பால் பட்டது,* 
  யாது அவங்களும் சேர்கொடேன் என்று*  என்னுள் புகுந்து இருந்து,* 
  தீது அவம் கெடுக்கும் அமுதம்*  செந்தாமரைக் கண் குன்றம்,* 
  கோது அவம் இல் என் கன்னல் கட்டி*  எம்மான் என் கோவிந்தனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எம்மான் என் கோவிந்தன் - எனக்காகக் கண்ணனா யவதாரித்த எம்பெருமான்
மாதவன் என்றதே கொண்டு - ‘மாதவன்’ என்று நான் வாயினாற் சொன்ன வளவையே கொண்டு
என்னை - என் விஷயத்தில்
இனி இப்பால் பட்டது - இனிமேலுள்ள காலமெல்லாம்
அவங்கள் யாதும் - ஒருவிதமர்ன குறையும்

விளக்க உரை

எம்பெருமான் என்னிடத்தில் இவ்வளவு கனத்த விஷயீகாரஞ் செய்வதற்கு அடியாக நான்செய்த ஸாதாநுஷ்டாநம் பெரிதாக வொன்றுமில்லை; மாதவன் என்று வெறுமனே வாயாற் சொன்னவளவையே கொண்டு என்னுடைய தீமைகளெல்லாவற்றையும் போக்கி ஆட்கொண்டானென்கிறார். எம்பெருமானுக்குப் பல திருநாமங்களிருந்தாலும், பிராட்டி ஸம்பந்தத்தை முன்னிட்டிருக்கின்ற திருநாமத்தில் அவனுக்கும் ஒரு ப்ரிதியுண்டு ஜாமாதா தயிதஸ் தவேதி பவதீஸம்பந்தத்ருஷ்ட்யா ஹாரிம் பச்யேம- என்று பட்டரும் ஸ்ரீகுணரத்ந கோசத்திலருளிச் செய்கிறார். ஜநக சக்ரவர்த்தியின் ஜாமாதா என்றும், பிராட்டிக்குக் கொழுநன் என்றும், உம்முடைய ஸம்பந்தத்தையிட்டே நாங்கள் எம்பெருமானை உகக்கக்கடவோ மென்று பெரிய பிராட்டியாரை நோக்கி யருளிச்செய்த ச்லோகம் அது. எம்பெருமானுக்குண்டான அதிசயங்களெல்லாம் பிராட்டியடியாகவே உண்டாவதாக ச்ருதீதிஹாஸ புராணங்களால் நன்கு விளங்கும். எம்பெருமான் தனக்கும் மிக்க பெருமை பயக்குமதான ஸ்ரீஸம்பந்தத்தைக் காட்டுகிற திருநாமத்தில் அப்பெருமானுக்கும் ஆதராதிசயம் இருக்க ப்ராப்தமர்கையாலே, மாதவன் என்கிற உக்தி மாத்திரத்தையே கொண்டு அவன் அளவுகடந்த அநுக்ரஹத்தைச் செய்தானென்பது உசிதமேயாகும். மா-பிராட்டிக்கு, தவன்- நாயகன் என்றபடி.

English Translation

For merely saying, "Madhava", he entered into me, saying, "Henceforth and forever, I shall stay and protect you" My lotus-eyed mountain-hued ambrosia, my perfect sugar candy, my master, my Govinda is the destroyer of our endless Karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்