விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உள் உள் ஆவி*  உலர்ந்து உலர்ந்து,*  என 
  வள்ளலே*  கண்ணனே என்னும்,*  பின்னும்
  வெள்ள நீர்க்*  கிடந்தாய் என்னும்,*  என 
  கள்விதான்*  பட்ட வஞ்சனையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என கள்வி - என்னிடத்திலும கூட உண்மையை மரைப்பவளான இப்பெண்பிள்ளைதான் அகப்படும்படி அவன் செய்த
தான்பட்ட - தான் அகப்படும்படி அவன் செய்த
வஞ்சனை - வஞ்சகம் (பலித்தபடி என்னென்னில்)
உள்ளுள் ஆவி - உள்ளுயிரானது
உலர்ந்து உலர்ந்து - மிகவுமுலர்ந்து

விளக்க உரை

தன் மகளுடைய வருத்தங்களையும், அவன் தன் குணங்களாலே இவளை வஞ்சித்தபடியையும் தாய் சொல்லுகிறாள். (உள்ளுலாவி உலர்நதுலர்ந்து) பகவத் கீதையிலே ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றிச் சொல்லும்போது * அச்சேத்யோய மதாஹ்யோயம் அக்லேத்ய; அசோ‘ய் ஏவ ச. * என்று சொல்லப்பட்டுளளது. அசோஷ்ய; - உலர்த்த முடியாதது - என்று சொன்னதும் பழுதாயிற்று; ஆந்தரமான மநஸ்ஸூக்கு தாரகமான ஆத்மா சருகாயிற்று. அந்த நிலைமையிலும் விடாயர் கற்பூரநிகரம் வாயிலிடுமா போலே என வள்ளலே! கண்ணனே! என்கிறாள்-- அவனுடைய ஔதார்யத்தையும் ஸௌலப்யத்தையுஞ் சொல்லிக் கத்துகிறாளென்க. பின்னும் வெள்ளநீர்க் கிடந்தாய் என்னும்=ஸ்ரீவிஷ்ணுதர்மத்தில் *அந்தகாரே அதி தீவ்ரே ச நரஸிம்ஹமநுஸ்மரேத், தரத்யகிலதுஃக்கா நி தாபார்த்தோ ஜலசாயிநம் *என்றுசொல்லப்பட்டுள்ளது. திணுங்கின; இருளிலே நரஸிம்ஹமூர்த்தியை நினைக்கவேணுமென்றும், தாபம் மிக்கிருக்குங்காலத்து க்ஷரிரார்ணவசாயியான எம்பெருமானை நினைக்கவேணுமென்றும் சொல்லியிருக்கையாலே வெள்ள நீர்க்கிடந்த பெருமாளைப் பேசாநின்றாள்.

English Translation

Her heart is dry, her soul is parched, "Dear-as-my eyes Lord!" Oh, the deceit that my clever one has fallen prey to!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்