விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காக்கும் இயல்வினன்*  கண்ண பெருமான்,* 
  சேர்க்கை செய்து*  தன் உந்தியுள்ளே,*
  வாய்த்த திசைமுகன்*  இந்திரன் வானவர்,* 
  ஆக்கினான்*  தெய்வ உலகுகளே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காக்கும் இயல்வினன் - ரக்ஷரிப்பதையே தொழிலாகவுடைய
கண்ண பெருமான் - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
சோக்கை செய்து - (ஸம்ஹார ஸமயத்துலெ எல்லாம் தன்னிடத்துச்) சேரும்படி செய்து
தன் உந்தி உள்ளே - தனது திருநாபிக்குள்ளே
வாய்த்த - ஸ்ருஷ்டி காரியத்திற்கு யோக்யனான

விளக்க உரை

ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்கள் மூன்றும் இவனிட்ட வழக்காகையாலும் இவனே யீச்வரனென்கிறார். * ந ஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே. ஸமர்த்தோத்ருச்யதே கச்சித் தம் விதா புருஷோர்த்தமம் *என்கிறபடியே அநிஷ்டங்களைப்போக்கி இஷ்டங்களைத் தருகையாகிற ரக்ஷணத்தை ஸ்வபாவமாக உடையனாய்; அந்த ரக்ஷணத்தைச் செய்வதற்காகவே கண்ணபிரானாய் வந்துபிறந்தவன். சோக்கை செய்துஸ்ர=கடைசியில் லயம் சொல்லும்போது * தம; பரே தேவ ஏகீபவதி*என்று தன் பக்கலிலே சேருவதாக ஓதிக்கிடக்கையாலே அதைச் சொன்னபடி. ஸம்ஹாரமானவாறே மீண்டும் ஸ்ருஷ்டியாதலால் அதைச் சொல்லுகிறது. தன்னுந்தி யுள்ளே என்று தொடங்கி.

English Translation

He mingled and merged himself into the Universe. He made Brahma the creator on his lotus-navel. He made Indra and the gods, and all the worlds. He is Kirshna, our Lord, protector of all.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்