விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நொந்து ஆராக் காதல் நோய்*  மெல் ஆவி உள் உலர்த்த,* 
  நந்தா விளக்கமே,*  நீயும் அளியத்தாய்,*
  செந்தாமரைத் தடங்கண்*  செங்கனி வாய் எம் பெருமான்,* 
  அம் தாமம் தண் துழாய்*  ஆசையால் வேவாயே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நந்தா விளக்கமே - அழிவில்லாத விளக்கே !
அளியத்தாய் - இரங்கத்தகுதியுடைய
நீயும் - நீயும்
நொந்து ஆரா காதல் நோய் - நோவுபட்டு மாளாத ஆசை நோயானது
மெல் ஆவி - மெல்லிய பிராணனையும்

விளக்க உரை

ஆற்றாமையாலே தன் மாளிகையிலே புகுந்து அங்கு எரிகிற விளக்கைக் கண்டு அதன் வெப்பத்தைப் பார்த்து ‘உடம்பில் கைவைக்கவொண்ணாதபடி விரஹஜ்வரம் பற்றி யொரியா நின்றது’ என்று கொண்டு நீயும் என்னைப் போலே பகவத் விரஹத்தாலே வெதும்புகிறாயோ வென்கிறாள். நொந்து ஆராக் காதல்நோய்ஸ்ர=உலகத்திலுள்ள வியாதிகளுக்கெல்லாம் நோவு படுத்துகைக்கு ஒருநாள்வரையிலே முடிவு உண்டு ப்ரேம வ்யாதி அப்படிப்பட்டதன்று; நோவுபடுத்தினது போருமென்று ஒருநாளும் தணியுமதன்று என்றவாறு. இப்படிப்பட்ட காதல் நோயானது, தொட்டார்மேலே தோஷமாம்படி மிருதுவாயிருக்கிற நற்சீவனைக் குருத்துவற்றாக வுலர்த்தும்படியாக என்பது முதலடியின் கருத்து இது “ஆசையால் வேவாயே” என்றதனோடு அந்வயிக்கும். முதலடியிற் சொல்லுகிற அம்சம் விளக்குக்கும் ஆழ்வார்க்கும் பொது. நொந்தாராக்காதல்நோய் தமக்கு இருப்பது போலவே விளக்குக்கு மிருப்பதாகவும், தாம் மெல்லாவியுள்ளுலர்த்தப் பெற்றிருப்பதுபோலே விளக்கும் இருப்பதாகவும் ஆழ்வாருடைய நினைவு.

English Translation

O, Lamp eternal, My poor dear! Your soul dries and your body buns, suffering unbearable grief through love-sickness. Did you too eek the cool Tulasi garland adoming the Lord of large lotus eyes and coral lips?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்