விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நைவாய எம்மேபோல்*  நாள் மதியே நீ இந் நாள்,* 
  மை வான் இருள் அகற்றாய்*  மாழாந்து தேம்புதியால்,*
  ஐ வாய் அரவு அணைமேல்*  ஆழிப் பெருமானார்,* 
  மெய் வாசகம் கேட்டு*  உன் மெய்ந்நீர்மை தோற்றாயே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நாள் மதியே - நிரம்பின சந்திரனே !
நைவு ஆய - நைந்து போவதையே இயற்கையாகவுடைய
எம்மே போல் - எங்களைப்போல (ஒளி யுரவாகிய) நீயும்
இ நாள் - இக்காலத்திலே
மை வான் - காரிய ஆகாயத்திலுள்ள

விளக்க உரை

கலாமாத்ரமாய் தேய்ந்து தோன்றின இளம்பிறைச் சந்திரனைக்கண்டு அந்தோ! உன் வடிவில் எழிலெல்லாம் இழந்தாயே! நீயும் அப்பெருமானுடைய பொய்யுரையிலே நம்பிக்கை கொண்டு நான் பட்டபாடு படுகின்றாய்போலும் ! என்கிறாள். நான்மதியே! என்பதற்கு, முன்பு பூர்ணணாயிருந்த சந்திரனே!’ என்கிற பொருளும், ‘இளம்பிறையே!’ என்கிற பொருளும் பொருந்தும். முதற்பொருளில் நாள் சென்றமதி என்றபடி; இரண்டாம் பொருளில் நாட்பூ என்னுமாபோலே. நைவாய எம்மேபோல்= ’நைவாய’ என்பதை ‘நை வாய;’ என்றும், ‘நைவுஆய’ என்றும் பிரிக்கலாம் நை என்பது முதனிலைத் தொழிற்பெயராய் நைதலை (அதாவது சைதில்யத்தை)ச் சொல்லும். வாய் என்றது இடமென்றபடி; எனவே சைதில்யத்திற்குப் பிறப்பிடமாகவுள்ள எங்களைப்போலே என்றதாயிற்று. அன்றியே ‘நைவு ஆய; என்று பிரித்தால் சைதில்யமே ஒருவடிவெடுத்து வந்தாற்போலேயிருக்கின்ற எங்களைப்போலே என்றதாகும்.

English Translation

O Crescent Moon! Today you do not dispel darkness. Like hapless me, you too are warning, day by day. Did you believe as true the words of promise made by the discus Lord, sleeping on a serpent couch?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்