விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மணியை வானவர் கண்ணனை*  தன்னது ஓர்- 
  அணியை,*  தென் குருகூர்ச் சடகோபன்,*  சொல்
  பணிசெய் ஆயிரத்துள்*  இவை பத்துடன்,* 
  தணிவிலர் கற்பரேல்,*  கல்வி வாயுமே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விளக்க உரை

முன்றானையிலே முடிந்து ஆளலாம்படி சுலபனாய் இருக்கிறவனை, நித்தியசூரிகள் தலைவனை, தனக்குத்தானே ஆபரணம் போன்ற அழகினையுடையவனை, அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் சொற்களைக்கொண்டு அடிமை செய்யும் ஆயிரத் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்கவேண்டும் என்னும் ஆசை குறைவு இல்லாதவர்களாகிக் கற்பார்களேயாயின், கல்வியின் பயனான தொண்டு செய்தல் அவர்களுக்கு உளதாம்.

English Translation

This decad of the thousand songs rendered in servide by karugur Satakopan addresses the gem-hued lord, one without a peer. Those who master it will attain pure knowledge.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்