விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நம்பியை*  தென் குறுங்குடி நின்ற,*  அச் 
  செம்பொனே திகழும்*  திரு மூர்த்தியை,*
  உம்பர் வானவர்*  ஆதி அம் சோதியை,* 
  எம் பிரானை*  என் சொல்லி மறப்பனோ?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நம்பியை - கல்யாணகுண பரிபூர்ணனும்
தென் குறுங்குடி நின்ற - திருக்குறுங்குடியிலே நிற்பவனும்
அ செம்போனே திகழும் திருமூர்த்தியை - அழகிய செம்பொன் போலவே பிரகாசிக்கின்ற திருமேனியையுடையவனும்.
உம்பர் வானவர் - மேலான நித்ய ஸூரிகளுக்கு
ஆதி - காரணபூதனும்

விளக்க உரை

அழகிய திருக்குறுங்குடி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை, அந்தச் செம்பொன் போன்று விளங்குகிற அழகிய திருமேனியையுடையவனை, பரமபதத்தில் எழுந்தருளியிருக்கின்ற நித்தியசூரிகளுடைய தொழில்கட்கெல்லாம் காரணனான பரஞ்சோதியை, எனக்கு உதவியைச் செய்தவனை நான் என்ன காரணத்தைக் கூறி மறப்பேன்?

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்