விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெற்றியுள் நின்று என்னை ஆளும்*  நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்,* 
    கற்றைத் துழாய் முடிக் கோலக்*  கண்ண பிரானைத் தொழுவார்,* 
    ஒற்றைப் பிறை அணிந்தானும்*  நான்முகனும் இந்திரனும்,* 
    மற்றை அமரரும் எல்லாம் வந்து*  எனது உச்சியுளானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒற்றை பிறை அணிந்தாலும் - சந்திரசேகரனாகிய சிவபெருமானும்
நான்முகனும் - பிரமதேவனும்
இந்திரனும் - தேவேந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம் - மற்றுமுள்ள எல்லாத் தேவர்களும்
வந்து - கிட்டி,

விளக்க உரை

ஒரு கலையுடன் கூடின பிறைச்சந்திரனை அணிந்திருக்கின்ற சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் மற்றும் இருக்கின்றதேவர்கள் எல்லோரும், எனது நெற்றியிலே நிலைபெற்று என்னை அடிமைகொள்ளுகின்ற மலர்போன்ற இரண்டு திருவடிகளையும் தங்கள் தங்கள் தலைகளின்மீது அணிந்துகொண்டு, தொகுதியான திருத்துழாய் மாலையினைத் தரித்த திருமுடியையுடைய அழகிய கண்ணபிரானை வணங்குவார்கள்; அவர்கள் அவ்வாறு வணங்கிக்கொண்டிருக்க, அக்கண்ணபிரான் வந்து எனது உச்சியிலே புகுந்தான்.

English Translation

The crescent-crowned Siva, the four-faced Brahma, Indra and all the other gods place their heads of his lotus feet and worship him. The Tulasi wreathed Krishna, my lord protecting me from my forehead has risen to my head!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்