விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்*  காண்பன் அவன் கண்களாலே,* 
    அமலங்கள் ஆக விழிக்கும்*  ஐம்புலனும் அவன் மூர்த்தி,*
    கமலத்து அயன் நம்பி தன்னைக்*  கண்ணுதலானொடும் தோற்றி* 
    அமலத் தெய்வத்தொடு உலகம்*  ஆக்கி என் நெற்றி உளானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கமலத்து நம்பி அயன் தன்னை - தாமரையானாயும் ஜ்ஞாநாதி பரிபூர்ணனாயுமிருக்கிற பிரமனையும்
கண் நுகலானொடும் - நெற்றிக்கண்ணனாகிய சிவபிரானையும்
தோற்றி - தோற்றுவித்து (அவர்கள் முதலாக)
அமலம் தெய்வத்தோடு - ஸாத்விகர்களான தேவர்களோடு கூடின
உலகம் - உலகங்களையும்;

விளக்க உரை

செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய இறைவன் என் கண்களுக்கு விஷயமானான். யானும் அவனைக் காண்கின்றேன். நான் குற்றமற்றவன் ஆகும்படி அவன் தன் திருக்கண்களாலே நோக்குகிறான். ஐம்பொறிகளும் சரீரத்தைப் போன்று அவனுக்கு அடிமையாகிவிட்டன. தாமரைமலரில் வீற்றிருப்பவனும் எல்லாக் குணங்களும் நிறைந்தவனும் ஆன பிரமனைச் சிவபெருமானோடு படைத்து, பின், குற்றம் அற்ற ஏனைய தேவர்களோடு உலகங்களையும் படைத்த இறைவன், இப்பொழுது என் நெற்றியில் தங்கி இருக்கின்றவன் ஆனான்.

English Translation

He created the lotus-born Brahma and the forehead-eyed Siva. He created the pure gods and all their worlds. I see the lotus-eyed Lord in my eyes, he too sees me clearly. He is in my forehead.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்