விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாவினுள் நின்று மலரும்*  ஞானக் கலைகளுக்கு எல்லாம்,* 
    ஆவியும் ஆக்கையும் தானே*  அழிப்போடு அளிப்பவன் தானே,*
    பூ இயல் நால் தடம் தோளன்*  பொரு படை ஆழி சங்கு ஏந்தும்,* 
    காவி நன் மேனிக் கமலக்*  கண்ணன் என் கண்ணின் உளானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாவினுள் நின்று - நாவினிடத்தில் நின்றும்
மலரும் - பரவுகின்ற
ஞானம் கலைகளுக்கு எல்லாம் - ஜ்ஞானஸாதனமான எல்லாக் கலைகளினுடையவும்
ஆவியும் ஆக்கையும் தானே - உயிரான அர்த்தமும் உடம்பான சப்தமும் தானிட்ட வழக்காம்படியிருப்பவனும்
அழிப்போடு அளிப்பவன் தானே - (அவற்றினுடைய) உத்பத்தி விநாசங்களும் தானிட்ட வழக்காம்படியிருப்பவனும்

விளக்க உரை

 நாவின் நுனியினின்றும் உண்டாகின்ற ஞானத்தைத் தருகின்ற எல்லாக் கலைகளுக்கும் உயிரும் உடலும் தானே யாவன்; அக்கலைகளை அழிக்கின்றவனும் அவற்றை அழியாமல் காக்கின்றவனும் தானேயாவன்; பூவின் தன்மையினையுடைய நான்கு திருத்தோள்களையுடையவன்; போர் செய்கின்ற ஆயுதங்களாகிய சக்கரத்தையும் சங்கையும் தரித்திருக்கின்ற நீலோற்பலம் போன்ற நிறம் பொருந்திய திருமேனியினையும் தாமரை போன்ற திருக்கண்களையுமுடையவன் ஆன எம்பெருமான் என் கண்ணிலே தங்கியிருக்கிறான்.

English Translation

In the wisdom of all the arts that blossom from the tongue, he is their letter and spirit; protector and destroyer too are him. Petal-soft, four-armed Lord with battle-fierce discus and conch, the lotus-eyed Lord is in my eyes.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்