விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாயோம் தீய அலவலைப்*  பெரு மா வஞ்சப் பேய் வீயத்* 
  தூய குழவியாய் விடப் பால் அமுதா*  அமுது செய்திட்ட-
  மாயன் வானோர் தனித் தலைவன்*  மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்- 
  தாயோன் தம்மான் என் அம்மான்*  அம்மா மூர்த்தியைச் சார்ந்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அலவலை - பஹுஜல்பிதங்களையுடையவளாய்
பெரு மாவஞ்சம் - மிகப்பெரிய வஞ்சகையான
பேய் - பூதனையானவள்
வீய- முடியும்படி
தூய் குழவி ஆய - பசுங்குழந்தையாகி

விளக்க உரை

பலவாறு பிதற்றிக்கொண்டு வந்தவளான மிகப் பெரிய வஞ்சனையுடைய கொடிய பூதனை இறக்கும்படி தூய்மையான குழந்தையாகி விஷம் கலந்த பாலினை அமிர்தம்போல ஆகும்படி புசித்த மாயவன்; நித்தியசூரிகட்கு எல்லாம் ஒப்பற்ற தலைவன்; திருமகள் கேள்வன்; எல்லா உயிர்களுக்கும் தாயைப் போன்றவன்; எல்லார்க்கும் தலைவன்; தனக்குத்தானே தலைவன்; எனக்குத் தலைவன்; அழகிய பெருமை பொருந்திய திருமேனியையுடையவன் ஆன இறைவனைச் சார்ந்தேன்; ஆதலால், இனிப் பிரியேன்.

English Translation

The peerless Lord of celestials, our Lord and protector is the spouse of Sri; a beautiful great form compassionate like a mother to all creation; with the innocence of a child he sucked the poisoned breast of the fierce ogrees putana, and drank her life to the bones.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்