விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விதியினால் பெடை மணக்கும்*  மென்நடைய அன்னங்காள்!* 
    மதியினால் குறள் மாணாய்*  உலகு இரந்த கள்வர்க்கு*
    மதியிலேன் வல் வினையே*  மாளாதோ? என்று ஒருத்தி* 
    மதி எல்லாம் உள் கலங்கி*  மயங்குமால் என்னீரே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விதியினால் - பாக்யவசத்தினால்
பெடை மணக்கும் - பேடையோடு கூடிக் களித்திருக்கின்ற
மெல் நடைய - மெல்லிய நடையையுடைய
கள்வர்க்கு - கபடமுடைய பெருமானுக்கு,
மதியிலேன் - புத்தியில்லாத என்னுடைய

விளக்க உரை

நல்வினையினால் பெண் அன்னங்களைச் சேர்ந்திருக்கிற மெல்லிய நடையினையுடைய அன்னங்காள், அறிவினால் குறுகிய வடிவையுடைய பிரமசாரியாகி உலகத்தினை யாசித்த வஞ்சனையுடையவருக்கு, ‘ஒரு பெண்ணானவள் அறிவில்லாத தன்னுடைய கொடிய வினைகள்தாம் அழியாதனவோ என்று கூறி, அறிவு எல்லாம் அடியோடு கலங்கி மயங்காநின்றாள்’ என்று கூறுங்கள்.

English Translation

O Graceful swans fortunate to be in the company of spouses! That clever dwarf who notoriously took the Earth by begging, -Go tell him that this maiden has lost all her senses. Alas, mindless me! My dark karmas will never end.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்