விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வீடுமின் முற்றவும்* வீடு செய்து*  உம் உயிர்
    வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே. (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முற்றவும் - (பஜந விரோதியான ஸாத்ய ஸாதனங்கள்) எல்லாவற்றையும்
விடுமின் - விட்டுவிடுங்கள்;
வீடு செய்து - அப்படிவிட்டு,
உம் உயி - உங்களுடை ஆத்ம ஸ்துவை
வீடு உடையான் இடை - மோக்ஷ நிர்வாஹகனான ஸ்வாமியிடத்திலே

விளக்க உரை

பொருள்களிடத்துள்ள ஆசை முழுவதனையும்விடுங்கோள்; அவ்வாறு விட்டு, உம்முடைய உயிரை, மோக்ஷ உலகத்தையுடைய இறைவனிடத்தில் சேர்த்துங்கோள்.

English Translation

Give up everything, surrender your soul to the Maker, and accept his protection.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்