விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பரந்த தண் பரவையுள்*  நீர்தொறும் பரந்துளன்* 
  பரந்த அண்டம் இது என:*  நிலம் விசும்பு ஒழிவு அறக்*
  கரந்த சில் இடந்தொறும்*  இடம் திகழ் பொருள்தொறும்* 
  கரந்து எங்கும் பரந்துளன்:*  இவை உண்ட கரனே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பரந்த - எங்கும் வியாபித்த
தண் பரவையுள் - குளிர்ந்த கடலினுள்
நீர் தொறும் - ஜலபரமாணுதோறும்
பரந்த அண்டம் - விஸ்தாரமான இவ்வண்டத்திலிருக்குமா போலே
இது என பரத்து உளன் - நெருக்குண்ணாமல் இருப்பவனாய் (இப்படி)

விளக்க உரை

உலகங்களை எல்லாம் கற்பாந்தகாலத்து உண்டு காத்த தலைவன், பரந்திருக்கின்ற குளிர்ந்த சமுத்திரத்திலுள்ள நீர் அணுத்தோறும் பரந்திருக்கின்ற அண்டம் இது என்று கூறும்படி பரந்திருக்கின்றான்; அவ்வாறே பூமி ஆகாயம் இவற்றிலும் எங்கும் பரந்து நிறைந்திருக்கின்றான்; மிகவும் சூக்குமமான உடல்தோறும் அவ்வவ்வுடல்களில் வசிக்கின்ற உயிர்தோறும் கண்களுக்குத் தெரியாதவாறு பரந்திருக்கின்றான் என்றவாறு.

English Translation

He who swallowed all, reclines in the cool ocean, resides in every drop, the Universe itself, complete on Earth and in the sky, hidden everywhere, in every atom and cell continuously, forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்