விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நின்றனர் இருந்தனர்*  கிடந்தனர் திரிந்தனர்* 
  நின்றிலர் இருந்திலர்*  கிடந்திலர் திரிந்திலர்* 
  என்றும் ஓர் இயல்வினர்*  என நினைவு அரியவர்* 
  என்றும் ஓர் இயல்வொடு*  நின்ற எம் திடரே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நின்றனர் - நிற்பவர்கள்
இருந்தனர் - இருப்பவர்கள்
கிடந்தனர் - கிடப்பவர்கள்
திரிந்தனர் - திரிபவர்கள் (ஆக இப்படிப்பட்டவர்களினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதலாகிற ப்ரவ்ருத்திகளெல்லாம் அப்பெருமானுடைய அதீநமே)
நின்றிலர் - நில்லாதவர்கள்

விளக்க உரை

‘நிற்றல், நில்லாமை; இருத்தல் இராமை; கிடத்தல், கிடவாமை; திரிதல், திரியாமை’ என ஒன்றுக்கு ஒன்றுமாறுபட்ட தொழில்களையுடையவர் ஆதலால், எப்பொழுதும் ஒரே தன்மையினையுடையவர் என நினைத்தற்கு அரியவர்; அப்படி நினைப்பதற்கு அரியவர் என்னும் தன்மை எப்பொழுதும் மாறுபடாமல் ஒரே நிலையோடு கூடியிருக்கின்றவர்; வேதங்களால் பரம்பொருள் இவனே என்று உறுதி செய்யப்பட்ட திடத்தையுடையவர்; அவர் என் தலைவர் ஆவர்.

English Translation

Our Lord is eternally one, unchanging ? standing, sitting, lying or walking; not, standing, not sitting, not lying, not walking; forever the same, forever not the same.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்