- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தான்முனநாள் இத்யாதி) இடைச்சிகளின் சேரியில் பிரவேசித்து, படல்மூடியிருந்த மனைகளிலே திருட்டுத்தனமாகப் படலைத் திறந்துகொண்டு புகுந்து தயிரையும் வெண்ணெயையும் வயிறு நிறைய விழிக்கினவளவிலே அவ்வாயர் மாதர்கண்டு பிடித்துக்கொண்டு உரலோடே இணைத்துக் கயிற்றாலே கட்டிப்போட்டு வைக்க ஒன்றுஞ் செய்யமாட்டாமல் அழுது ஏங்கிக் கிடந்தானே, இது என்றைக்கோ நடந்த காரியமென்று நான் விட்டுவிடுவேனோ? இவ்வழிதொழிலை இன்று எல்லாருமறிந்து “கள்ளப்பையலோ இவன்“ என்று அவமதிக்கும்படி செய்து விடுகிறேன் பாருங்கள் – என்கிறாள். பெற்றிமையும், தெற்றெனவும் சென்றதுவும் என்கிற இவையெல்லாம் மேலே “மற்றிவை தான் உன்னி யுலவா“ என்றவிடத்தில் அந்வயித்து முடிவுபெறும். இப்படிப்பட்ட இவனுடைய இழிதொழில்கள் சொல்லி முடிக்கப் போகாதவை என்றவாறு.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்