விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னும் மறைநான்கும் ஆனானை,* புல்லாணித்-
    தென்னன் தமிழை வடமொழியை,*  நாங்கூரில்-
    மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,*
    நல்நீர் தலைச்சங்க நாள்மதியை,* -நான்வணங்கும்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தென்னன் தமிழை வடமொழியை - உபயவேத ப்ரதிபாதயனாய்
நாங்கூரில் - திருநாங்கூரில்
மணிமாடக்கோயில் மன்னு மணாளனை - மணிமாடக் கோயிலில் நித்ய வாஸம் பண்ணுகிற மணவாளப் பிள்ளையாய்
நல் நீர் தலைச் சங்கம் நாண்மதியை - நல்ல நீர்சூழ்ந்த தலைச்சங்க நாட்டிலுள்ள நாண் மதியப் பெருமாளாய்
நான் வணங்கும் கண்ணனை - நான் வணங்கத்தக்க கண்ணனாய்

விளக்க உரை

நீர்மலை – நீரானது அரண் போலச் சூழப்பெற்ற மலையானது பற்றித் திருநீர்மலை யெனப்படும். புல்லணை யென்பதன் மருஉ, ஸீதையைத் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லும் பொருட்டு ஸ்ரீராமபிரான் வாநரஸேனையுடனே புறப்பட்டுச்சென்று தென்கடற்கரையை யடைந்து கடல்கடக்க உபாயஞ் சொல்ல வேண்டுமென்று அக்கடலரசனான வருணனைப் பிரார்த்தித்துத் தர்ப்பத்தில் பிராயோபவேசமாகக் கிடந்த ஸ்தரமாதலால் புல்லனை யெனப்பட்டது. தர்ப்பசயா க்ஷேத்ரமெனவும் படும். தலைச்சங்க நாண்மதியை –சிறந்த சங்கத்தை யேந்திய நாண்மதியப் பெருமானுடைய தலமாதல்பற்றித் தலைச்சங்க நாண்மதியமென்று திவ்யதேசத்தின் திருநாமம்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்