விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சென்னி மணிச்சுடரை தண்கால் திறல்வலியை,*
  தன்னைப் பிறர்அறியாத் தத்துவத்தை முத்தினை,*
  அன்னத்தை மீனை அரியை அருமறையை,*
  முன்னிவ் உலகுஉண்ட மூர்த்தியை,*  -கோவலூர்- 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் மனத்து மாலை - என்மேல் வ்யாமோஹ்முடையனாகி எனது நெஞ்சை விட்டுப்பிரியாதவனாய்
இடவெந்தை ஈசனை - திருவிடவெந்தையிலெழுந்தருளியிருக்கிற ஸர்வேவரனாய்
கடல் மல்லை மன்னும் மாயவனை - திருக்கடலமல்லையிலே நித்யவாஸம் செய்யும் ஆச்சரியானாய்
வானவர் தம் சென்னி மணி சுடரை - நித்ய ஸூரிகளுடைய சிரோபூஷணமாக விளங்குமவனாய்
தண்கால் திறல் வலியை - திருத்தண்காலில் எழுந்தருளியிருக்கிற மஹா பலசாலியாய்

விளக்க உரை

இடவெந்தை இத்தலத்திலெழுந்தருளியுள்ள வாஹப்பெருமாள் தமது தேவியை இடப்பக்கத்திற் கொண்டிருத்தலால் இத்தவத்திற்கு திருவிடந்தை யென்று திருநாமமாயிற்று. தன்கால் இது ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு ஸமீபத்திலுள்ளது. திருத்தாங்கல் என்று ஸாமாந்யர் வ்யவஹிப்பர்கள். தன்கால் என்பதற்குக் குளிர்ந்த காற்று என்று பொருள், சீதவாதபுர மென்பர். திறல்வலி –எதிரிகளை அடக்கவல்ல பெருமிடுக்கன். தன்னைப் பிறரறியாத் த்த்துவத்தை – தனான தன்மையைத் தானே நிர்ஹேதுக்ருபையால் காட்டி ஆழ்வார் போல்வர்க்கு அறிவிக்கலாம்தனை யொழிய மற்றையார்க்கு ஸ்வப்ரயத்நத்தால் அறிய வொண்ணாதபடி. முத்தினை – முத்துப்பொலே தாபஹரனானவனை அன்னத்தை மீனை அரியை ஹரி என்னும் வடசொல்லுக்குப் பதினைந்து அர்த்தங்களுண்டு, பிரகிருத்த்தில் குதிரை சிங்கம் என்கிற இரண்டு பொருள்கள் கொள்ளலாம். குதிரையென்று கொண்டால் ஹயக்ரீவாவதாரஞ் செய்தபடியைச் சொல்லிற்றாகிறது. சிங்கமென்று கொண்டால் நரசிங்காவதாரஞ் சொல்லிற்றாகிறது. ஹம்ஸாவதாரம் மத்ஸ்யாவதாரம் ஹயக்ரீவாவதாரம் என்ற மூன்றாவதாரங்களும் வித்யொப தேசத்திற்காகச் செய்தருளினவையாம்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்