விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்னம் துயிலும் அணிநீர் வயல்ஆலி,*
    என்னுடைய இன்அமுதை எவ்வுள் பெருமலையை,* (2)
    கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,*
    மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்-
    பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர்ஏற்றை,*
    மன்னும் அரங்கத்து எம் மாமணியை,* (2) -வல்லவாழ்ப்- 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெள்ளறையுள் - திருவெள்ளறையிலே
கல் அறை மேல் - கருங்கல் மயமான ஸந்நிதி யினுள்ளே
பொன்னை - பொன் போல் விளங்குமவனாய்
மரதகத்தை - மரதகப்பச்சை போன்ற வடிவை யுடையனாய்
புட்குழி எம் போர் எற்றை - திருப்புட் குழியிலே எழுந்தருளி யிருக்கிற அஸ்மத்ஸ்வாமியான ஸமரபுங்கவனாய்,
அரங்கத்துமன்னும் - திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிறவனாய்

விளக்க உரை

கண மங்கை – கண்ணமங்கை யென்பதன் தொகுத்தல் மின்னை இருசுடரை –மின்னல்போலவும் சந்திர ஸூரியர்கள் போலவும் பளபளவென்று விளங்குபவன் என்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம் மின் என்று மின்னற் கொடிபோன்ற பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய், இருசுடர் என்று ஸூர்ய சந்திரர்களுக்கொப்பான திருவாழி திருச்சங்குகளைச் சொல்லிற்றாய் இம்மூவரின் சேரத்தியைச் சொல்லுகிறதாக அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவுள்ளம் “அங்கு நிற்கிறபடி யெங்ஙனே யென்னில், பெரிய பிராட்டியாரோடும் இரண்டருகுஞ் சேர்ந்த ஆழ்வார்களோடுமாயிற்று நிற்பது“ என்ற ஸ்ரீஸூக்தி காண்க. வெள்ளறை – வெண்மையான பாறைகளாலியன்ற மலை, (அறை –பாறை) இது வடமொழியில் ச்வேதாத்ரி எனப்படும். புட்குழி – புள் ஜடாயுவென்னும் பெரியவுடையார் அவரைக் குழியிலிட்டு ஸம்ஸ்பரித்தவிடமென்று சொல்லுதல பற்றிப் புட்குழி யென்று திருநாம்மாயிற்றென்பர், போரேறு – ஸமரபுங்கவன் என்று வடமொழித் திருநாமம் ஸமர – யுத்தத்தில் புங்கவ – காலை போலச் செருக்கி யுத்தம் நடத்துபவர். அரங்கம் – எம்பெருமான் ரதியை அடைந்த இடம், ரதியானது ஆசைப்பெருக்கம். அதனை யடைந்து (ஆசையுடன்) வாழுமிடம், ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் ஸூர்யமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்திலும் இனிய தென்று திருமால் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமான தென்பதுபற்றி ‘ரங்கம்‘ என்று அவ்விமாநத்திற்குப் பெயர். அதுவே லக்ஷணையால் திவ்ய தேசத்திற்குத் திருநாமமாயிற்று. தானியாகுபெயர். இனி, ரங்கமென்று கூத்தாடு மிடத்துக்கும் பெயராதலால், திரு அரங்கம் –பெரிய பிராட்டியார் ஆநந்தமுள்ளடங்காமல் நிருந்தஞ் செய்யுமிடம் என்றும் மற்றும் பலவகையாகவங் கொள்ளலாம்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்