விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சின்ன நறும் பூந் திகழ் வண்ணன்*  -வண்ணம்போல்-
  அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி,*
  மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்,*
  பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து*
  தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை,*  -ஆயிரக்கண்-

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மா மண்டு வெம் சமத்து - சதுரங்கபலம் நிறைந்த கொடிய போர்க்களத்தில்
மன்னன் இராவணனை - ராக்ஷஸ ராஜனான ராவணனுடைய
பொன் முடிவுகள் பத்தும் புரள - அழகிய பத்துத்தலைகளும் (பூமியில் விழுந்து) புரளும்படியாக
சரம் துரந்து - அம்புகளைப் பிரயோகித்து
தென் உலகம் ஏற்றவித்த சேவகனை - (அவ்விராவணனை) யமலோகமடைவித்த மஹா சூரகனாய்.

விளக்க உரை

மா மண்டு வெஞ்சமத்து – மா என்று யானையையும் குதிரையையும் சொல்லும், ரதம், கஜம், துரகம், பதாதி எனச் சேனையுறுப்புக்ள நான்காதலால் மற்ற இரண்டு உறுப்புகட்கு உபலக்ஷணமென்க மண்டுல் – நெருங்கியிருத்தல் சேவகனை – சேவகமாவது வீரம், அதனையுடையவன் சேவன். “செருவிலே அரக்கர்கோனைச் பெற்ற நம் சேவகனார்“ என்றார் தொண்டரடிப்பொடியாழ்வாரும். “இது விளைத்த மன்ன்ன்“ என்று தொடங்கி, “தென்னறையூர்“ மன்னு மணிமாடக்கோயில் மணாளனைக் கன்னவில் தோள்காளையை“ என்கிற வரையில் எம்பெருமானுடைய விபவாவதார வைபவங்கள் அர்ச்சாவதார வைபவ“கள் முதலியன விரிவாகக் கூறப்படுகின்றன. மார்பன். முகில்வண்ணன், சேவகனை, வீரனை, கூத்தனை என்கிற இவ்விசேஷணங்கள் எல்லாம் மேலே கன்னவில் தோள் காளையை என்ற விடத்தில் அந்வயித்து முடியும்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்