விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னு கரதலங்கள் மட்டித்து,*  மாதிரங்கள்-
    மின்னி எரி வீச மேலெடுத்த சூழ்கழற்கால்*
    பொனுலகம் ஏழும் கடந்து உம்பர்மேல் சிலும்ப*
    மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,*
    தன்னினுடனே சுழல சுழன்றாடும்,*
    கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,*
    அன்னவன்தன் பொன்னகலம் சென்றங்கு அணைந்திலளே?,*
    பன்னி உரைக்குங்கால் பாரதமாம்*  -பாவியேற்கு- 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மன்னு குலம் வரையும் மாருதமும் தாரகையும் தன்னினுடைனே சுழல - ஸ்திரமாக நிற்கிற குல பர்வதங்களும் காற்றும் நக்ஷத்திரங்களும தன்னோடு கூடவே சுழன்றுவர
சுழன்று ஆடும் - தான் சுழன்று நர்த்தனஞ் செய்பவனும்
கொல் நவிலும் மூ இலை வேல் - கொலைத்தொழில் புரிகின்ற மூன்று இலைகளை யுடைதான சூலத்தை யுடையவனும்
கூத்தன் - கூத்தாடியென்று ப்ரஸித்தனுமான
அன்னவன் தன் - அப்படிப்பட்ட சிவபிரானுடைய
பொன் அகலம் சென்று அணைந்திலளே - அழகிய மார்பைக்கிட்டி ஆலங்கனம் செய்து கொள்வில்லையா?
பன்னி உரைக்குங் கால் - (இப்படிப்பட்ட உதாஹரணங்களை இன்னும்) விஸ்தரித்துச் சொல்லுகிற பக்ஷத்தில்
பாரதம் ஆம் - ஒரு மஹாபாரத மாய்தலைக்கட்டும்.
 

விளக்க உரை

மாதிரங்கள் மின்னி எரிவீச –“ஒருருவம் பொன்னுருவ மொன்று செந்தீ ஒன்றுமாகடலுருவம்“ என்றபடி சிவனது உருவம் செந்தீ யுருவமாதலால் அன்னவன் தனது காலை மேலே தூக்கிச் சுழன்று ஆடும்போது திசைகளெல்லாம் நெருப்புப்பற்றி யெரிவன்னபோல் காணப்படுமென்க. சூழ்கழற்கால் கழல் சூழ்ந்த கால் வீரத்தண்டை அணிந்த கால் என்றபடி. பொன்னுலக மேழுங்கடந்து என்றது –கூத்தாடும்போது சிவனுடைய கால் நெடுந்தூரம் வளர்ந்து சென்றமையைச் சொன்னவாறு. உம்பர் மேல் மேன் மேலும் (மன்னு குலவரையும் இத்யாதி) நாமெல்லாம் தட்டாமாலையோடும்போது அருகிலுள்ள செடிகொடி முதலியனவும் கூடவே சுழல்வதாகக் காணப்படுமன்றோ. சிவபிரான் பெரியவுருக்கொண்டு சூழன்றாடும்போது பெருப்பெருத்த பாதார்த்தங்களெல்லாம் உடன் சுழல்வனபோற் காணப்படுமாற்றிக. இப்படியாக கூத்தாடின சூலபாணியும் பஸ்மதாரியுமான சிவனது மார்போடே அணையப்பெறுதற்காகப் பார்வதி தவம்புரிந்தபடியை மஹாபாரத்தில் பரக்கக் காண்மின் என்று தலைக்கட்டிற்றாயிற்று.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்